Home
Mobile

அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. 120W ஃபாஸ்ட் சார்ஜ்.. ஆகஸ்ட் 31-ல் வரும் சூப்பர் போன்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது ஐக்யூ இசட் 8 (iQOO Z8) போனை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஐக்யூ இசட் 8 ஸ்மார்ட்போன் ஆனது 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி (Full HD+ LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2388×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) ஆதரவு, 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய ஐக்யூ போன் அறிமுகமாகும்.

120W ஃபாஸ்ட் சார்ஜ்.. ஆகஸ்ட் 31-ல் வரும் சூப்பர் போன்.. எந்த மாடல்?

3.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 4என்எம் பிராசஸர் (3.1GHz Octa Core MediaTek Dimensity 8200 4nm processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட் 8 ஸ்மார்ட்போன். மேலும் இதனுடன் மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) ஆதரவும் உள்ளது. அதேபோல் இந்த போன் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது.

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட் 8 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐக்யூ இசட் 8 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐக்யூ இசட் 8 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன் அறிமுகமாகும். குறிப்பாக யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo speakers) கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஐக்யூ இசட் 8 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

120 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் (120W ultra-fast flash charge) வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட் 8 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை சில நிமிடங்களில் முழு சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதிக்குத் தகுந்தபடி சிறந்த பாதுகாப்பு வசதியும் உள்ளது.

120W ஃபாஸ்ட் சார்ஜ்.. ஆகஸ்ட் 31-ல் வரும் சூப்பர் போன்.. எந்த மாடல்?

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (In-display fingerprint sensor) வசதி இந்த ஐக்யூ இசட் 8 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐக்யூ ஸ்மாரட்போன் மாடல்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஐக்யூ இசட் 8 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 பட்ஜெட் வெளிவரும். குறிப்பாக தரமான சிப்செட் வசதி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, அட்டகாசமான கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New iQOO Z8 smartphone will be launched on August 31:Check Specifications, Price: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X