இப்படி ஒரு 5G போன் கிடைக்கிறது எல்லாம் வரம்.. iQOO-வின் தரமான சம்பவம்.!
ஐக்யூ (iQOO) நிறுவனம் தனித்துவமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஐக்யூ நிறுவனம் ஒரு புத்தம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஐக்யூ நிறுவனம் தற்போது iQOO Z7s 5G ஸ்மார்ட்போனை தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஐக்யூ Z7s 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய ஐக்யூ Z7s 5ஜி ஸ்மாரட்போன் ஆனது 6.38-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2400×1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் சிப்செட் உடன் அட்ரினோ 619எல் ஜிபியு ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தம் புதிய ஐக்யூ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஐக்யூ Z7s 5ஜி ஸ்மாரட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
இந்த ஐக்யூ Z7s 5ஜி ஸ்மாரட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நார்வே ப்ளூ மற்றும் பசிபிக் நைட் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐக்யூ Z7s 5ஜி ஸ்மாரட்போன். மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கான IP54 சான்றிதழைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய போன். அதேபோல் பாட்டம்-ஃபைரிங் ஸ்பீக்கர்கள் மற்றும் 172 கிராம் எடையைக் கொண்டு வெளிவந்துள்ளது ஐக்யூ Z7s 5ஜி சாதனம்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட ஐக்யூ Z7s 5ஜி போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. தற்போது ஐக்யூ.காம் மற்றும் அமேசான் தளங்களில் இந்த போனை வாங்க முடியும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த போனில் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








