ஆகா வருது வருது.. நீ விலகு விலகு..சூப்பர் தகவலை வெளியிட்ட iQOO நிறுவனம்.!
வரும் மே 23-ம் தேதி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 40 போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என மோட்டோரோலா சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் ஐக்யூ நிறுவனமும் புதிய ஐக்யூ நியோ 8 எனும் ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 23-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால் இந்த ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஐக்யூ நியோ 8 போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்கள் இந்த ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போன் மாடலை நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.
மேலும் இந்த ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
குறிப்பாக 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் இந்த புதிய ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போன். எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐக்யூ நியோ 8 போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








