சைலண்டா சம்பவத்தை செய்த iQOO: இரண்டு புதிய 5G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! என்ன விலை?
ஐக்யூ (iQOO) நிறுவனம் புதிய ஐக்யூ நியோ 8 மற்றும் ஐக்யூ நியோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு புதிய ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான கேமரா வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
ஐக்யூ நியோ 8 ப்ரோ அம்சங்கள்: 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த ஐக்யூ நியோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 2800 x 1260 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ஐக்யூ நியோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கேமிங் பயன்பாடுகளுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு Origin OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும், அதேசமயம் இதை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
ஐக்யூ நியோ 8 ப்ரோ பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் ஆகிய கேமராக்கள் உள்ளன. பின்பு 16எம்பி செல்பி கேமராவுடன் இந்த ஐக்யூ நியோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு புளூடூத் 5.3, 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 7, ஜிபிஎஸ். என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஐக்யூ நியோ 8 ப்ரோ போன் வெளிவந்துள்ளது.
ஐக்யூ நியோ 8 அம்சங்கள்: 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த ஐக்யூ நியோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 2800 x 1260 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் 1 ஜென் சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கேமிங் பயன்பாடுகளுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு Origin OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும், அதேசமயம் இதை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஐக்யூ நியோ 8 பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. பின்பு 16எம்பி செல்பி கேமராவுடன் இந்த ஐக்யூ நியோ 8 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு புளூடூத் 5.3, 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 7, ஜிபிஎஸ். என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஐக்யூ நியோ 8 போன் வெளிவந்துள்ளது.
விலை: தற்போது ஐக்யூ நியோ 8 மற்றும் ஐக்யூ நியோ 8 ப்ரோ போன்கள் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக ஐக்யூ நியோ 8 போனின் ஆரம்ப விலை CNY 2,499 ( ரூ.29,300). அதேபோல் ஐக்யூ நியோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ.38,700).


Click it and Unblock the Notifications








