சத்தமே இல்லாம சம்பவத்தை செய்த iQOO: புதிய 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம்.! ஆரம்பமே ஆஃபர்..
ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி (iQoo Neo 7 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐக்யூ போன்.

குறிப்பாக ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த போன் அருமையாகப் பயன்படும். மேலும் Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஃபியர்லெஸ் ஃபிளேம் மற்றும் டார்க் ஸ்டோர்ம் நிறங்களில் இந்த புதிய ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா(Samsung GN5 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ், கைரோஸ்கோப் உள்ளிட்ட பல சென்சார் வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஐக்யூ போன். மேலும் இந்த போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. அதேபோல் 120 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 5ஜி, 4ஜி எல்இடி, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ். யுஎஸ்பி டைப்-போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போனின் எடை 194.5 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.34,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ37,999-ஆக உள்ளது. அமேசான் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் ஜூலை 15 முதல் விற்பனைக்கு வரும் இந்த ரியல்மி போன்.
குறிப்பாக ஜூலை 18 ஆம் தேதிக்குள் இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








