Just In
- 1 hr ago
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- 2 hrs ago
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- 3 hrs ago
உங்கள் WiFi சிறப்பா.. ஸ்பீடா.. செயல்பட இந்த 5 விஷயத்தை செய்யணும்.! உடனே ட்ரை செய்து பாருங்க.!
- 4 hrs ago
Tech Tips: வாட்ஸ்அப்பில் இன்னொரு ஷார்ட்கட்.. இனிமேல் வாட்ஸ்அப் கால் செய்யும் போது..?
Don't Miss
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. நிர்மலா சீதாராமன் சொல்வதைக் கேட்டீங்களா..!!
- News
முதலமைச்சரின் முதல் கள ஆய்வே 'தெறி'! 24 மணி நேரத்திற்குள் கலெக்டர் டிரான்ஸ்ஃபர்! அதிரடி பின்னணி!
- Movies
Bloody Sweet: கோல்ட் காயினில் லியோ டைட்டில்.. சாக்லேட் ஃபேக்டரியும் கூர்வாளும்.. தெறிக்குது!
- Sports
இந்தியா மீது குவியும் பிட்ச் குற்றச்சாட்டுக்கள்.. அஸ்வின் தரமான பதிலடி.. அட இது நல்லா இருக்கே!
- Lifestyle
உங்க குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை தவறாமல் சாப்பிட கொடுக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- Automobiles
புதிய டாடா எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்களை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்! டெலிவரி தொடங்கியது!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாங்க வாங்க உங்களுக்காகத் தான் வெயிட்டிங்: புதிய 5ஜி போனை இறக்கிவிட்டு தூள் கிளப்ப போகும் iQOO.!
ஐக்யூ நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஐக்யூ நியோ 7 எஸ்இ எனும் புதிய ஸ்மார்ட்போனை வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது இந்த ஐக்யூ நிறுவனம்.
சமீபத்தில் Bureau of Indian Standards (BIS)சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட் கூடிய விரைவில் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் I12214 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கசிந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே கொண்டு இந்த போன் வெளிவரும் என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆனது குவாலம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் அல்லது மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம் அதேபோல் அட்டகாசமான வடிவமைப்புடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இதில் ஆப்ஸ்களை தடையின்றி இயக்க முடியும்.
புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஐக்யூ நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன். பின்பு இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய போன்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470