Home
Mobile

OnePlus சோலிய முடிச்சுவிட்ட புது iQOO போன்.. 8000mAh பேட்டரி, IP69, 200MP கேமரா, 2K டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர் ஆன ஐக்யூ (iQOO) நிறுவனம், ஒரு புதிய ஹை-பெர்பார்மென்ஸ் ஸ்மார்ட்போனை தயாரித்து வருவதாக தெரிகிறது. இது மீடியாடெக்கின் பிளாக்ஷிப் சிப்செட்டான டைமென்சிட்டி 9500 உடன் வரும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த சிப்செட் ஏற்கனவே பல ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் போன்களுக்கு ஆற்றலளிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக இந்த தகவல் (இந்த சிப்செட்) உண்மையாக இருந்தால், வரவிருக்கும் ஐக்யூ ஸ்மார்ட்போன் ஆனது - மிகவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி கே90 மேக்ஸ் மற்றும் வரவிருக்கும் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா போன்ற செயல்திறனை மையமாக கொண்ட பிற மாடல்களுடன் நேரடி போட்டியில் இருக்கும்!

புது iQOO போன்.. 8000mAh பேட்டரி, IP69, 200MP கேமரா, 2K டிஸ்பிளே!

இருப்பினும் இப்போதைக்கு இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனின் சரியான மாடல் பெயர் குறித்த விவரங்கள் இல்லை. இது ஒரு ஐக்யூ நியோ-சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் அல்லது ஐக்யூ 15டி (iQOO 15T) மாடல் ஆக இருக்கலாம் என்பது வரை யூகங்கள் நிலவுகின்றன. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக, இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஐக்யூ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் போன்களுக்கு இணையாக, 2கே ரெசல்யூஷன் கொண்ட 6.83-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவைகொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் பேக் செய்யலாம், இது நடுத்தர விலை போன்களில் பொதுவாக காணப்படும் ஆப்டிகல் சொல்யூஷனை விட ஒருபடி மேம்பட்டதை குறிக்கிறது.

பேட்டரி திறன் இதன் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக இருக்கலாம். இது 7845mAh திறன் கொண்ட ஒரு யூனிட்டை குறிப்பிடுகிறது, இது 8,000mAh என சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இது தற்போது 6,000 - 7,000mAh வரம்பில் உள்ள பெரும்பாலான பிளாக்ஷிப் போன்களின் பேட்டரிகளை விட கணிசமாக பெரியதாக இருக்கும்.

கட்டமைப்பைப் பொறுத்தவரை, இந்த போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்களுடன் ஒரு மெட்டல் மிடில் ஃபிரேமை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 200MP ப்ரைமரி கேமரா இடம்பெறலாம், இருப்பினும் மேற்கண்ட எந்த விவரங்களுமே இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆக இப்போதைக்கு அதிகாரப்பூர்வ அப்டேட்டிற்கு காத்திருப்பது நல்லது.

ஏப்ரல் 28 சீனாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ்ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? சீனாவில் அறிமுகமாகும் இந்த மாடல் இந்தியாவில் ஒரு நார்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆக ரீபிராண்டட் (கிட்டத்தட்ட அதே அம்சஙகளுடன் வேறு மாடல் பெயரின் கீழ்) செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முன்னதாக ஏஸ் சீரீஸ் கீழ் சீனாவில் அறிமுகமான மாடல்கள் நார்ட் சீரீஸின் கீழ் இங்கே வந்துள்ளன.

ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ராவில் 8,600mAh பேட்டரி பொருத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இன்றைய பெரும்பாலான பிளாக்ஷிப் போன்கள் வழங்குவதை விட கணிசமாக பெரியது ஆகும். கூடவே இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? - வலுவான தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66, IP68, IP69, மற்றும் IP69K ரேட்டிங் - இன் ஸ்க்ரீன் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் - டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் - ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 16

Best Mobiles in India

English summary
New iQOO flagship Phone with 8000mAh battery tipped to Launch Soon Rival OnePlus Ace 6 Ultra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X