Home
Mobile

64எம்பி கேமரா, 6.38-இன்ச் டிஸ்பிளே கொண்ட iQOO Z7 5G போன்:சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வருகிறது! முழு விவரம்.!

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட iQOO Z7 5G ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வருகிறது. அதாவது அமேசான் தளத்தில் இன்று மதியம் 1 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக அட்டகாசமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை மற்றும் சலுகைகள்:6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Z7 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. ஆனால் பிரத்யேக வங்கிச் சலுகைகளுடன், 6ஜிபி +128ஜிபி மாடலை ரூ.17,499 விலையிலும், 8ஜிபி + 128ஜிபி மாடலை ரூ.18,499 விலையிலும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

64எம்பி கேமரா கொண்ட iQOO 5G போன் சலுகைகளுடன் விற்பனைக்கு வருகிறது.!

அம்சங்கள்: குறிப்பாக நார்வே ப்ளூ மற்றும் பசிபிக் நைட் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கும். மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 6.38 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் இதன் சிப்செட் வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதாவது iQOO Z7 5G ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 920 5G சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் FunTouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போன் 2 வருட OS அப்டேட்களையும் மூன்று வருட மாதாந்திர செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும்.

64எம்பி கேமரா கொண்ட iQOO 5G போன் சலுகைகளுடன் விற்பனைக்கு வருகிறது.!

64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த iQOO Z7 5G ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவுடயுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த iQOO Z7 5G ஸ்மார்ட்போன் மாடல். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

64எம்பி கேமரா கொண்ட iQOO 5G போன் சலுகைகளுடன் விற்பனைக்கு வருகிறது.!

நிறைகள் மற்றும் குறைகள்: 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த iQOO Z7 5G ஸ்மார்ட்போன். இந்த போனில் பெரிய டிஸ்பிளே மற்றும் சிப்செட் போன்றவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். அதேபோல் 4600 எம்ஏஎச் பேட்டரிக்கு பதிலாக 5500 எம்ஏஎச் பேட்டரி வசதி இருந்திருந்தால் கேமிங் போன்ற வசதிகளுக்கு நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைத்திருக்கும். மற்றபடி இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New iQOO 5G phone to go on first sale in India check iQOO Z7 5G pros and cons before buying it : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X