50எம்பி ரியர் கேமராவுடன் புதிய 5ஜி போனை களமிறக்கும் iQOO.! ரெடியா இருங்க..
ஐக்யூ (iQOO)நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஐக்யூ (iQOO) நிறுவனம் ஒரு புதிய 5ஜி போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதாவது ஐக்யூ நிறுவனம் விரைவில் iQOO 11s எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, ஐக்யூ 11எஸ் ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த மாதம் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஐக்யூ 11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம். அதாவது ஐக்யூ 11எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் 2கே இ6 AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.
ஐக்யூ 11எஸ் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 சிப்செட் வசதியைக் அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த சிப்செட் மிகவும் அருமையாகப் பயன்படும். பின்பு Origin OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
விரைவில் அறிமுகமாகும் ஐக்யூ 11எஸ் ஸ்மார்ட்போனில் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 11எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தௌவாக புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.
4700 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஐக்யூ 11எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 200 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த ஐக்யூ 11எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 11எஸ் ஸ்மார்ட்போன்.அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications