Home
Mobile

சியோமி கொஞ்சம் சத்தமில்லாமல் இருங்க.! டிச. 8 இல் சம்பவம் செய்ய போகும் புதிய 5ஜி போன்.!

விவோ நிறுவனத்தின் துணை பிராண்டு ஐகூ வரும் டிசம்பர் 8-ம் தேதி ஐகூ 11 5ஜி (iQoo 11 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகமாகும்.

iQoo 11 5G போன்

iQoo 11 5G போன்

iQoo 11 ஸ்மார்ட்போன் உடன் iQOO 11 Pro எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஐகூ நிறுவனம். குறிப்பாக iQoo 11 5G போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த iQoo 11 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

25 சதவீதம் வேகமான GPU திறன்

25 சதவீதம் வேகமான GPU திறன்

iQoo 11 5G ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட வேகத்தை கொடுக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் 40 சதவீத அதிக மின்திறன் பயன்பாடு, 25 சதவீதம் வேகமான GPU திறன் கொண்டிருக்கிறது. எனவே இந்த iQoo 11 ஸ்மார்ட்போன் அறிமுகமானால் நம்பி வாங்கலாம்.

AMOLED டிஸ்பிளேAMOLED டிஸ்பிளே

iQOO 11 5G ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

128ஜிபி ஸ்டோரேஜ் வசதி

128ஜிபி ஸ்டோரேஜ் வசதி

iQOO 11 5G ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி மெயின் கேமரா

50எம்பி மெயின் கேமரா

iQOO 11 5G ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

iQOO 11 5G ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, அதேசமயம் சில நிமிடங்களில் இந்த போனை ஃபுல் சார்ஜ் செய்ய முடியும்.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாகும் இந்த iQOO 11 5G ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த iQOO 11 5G போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
new iQOO 11 5G smartphone will launch on December 8: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X