எழுதி வச்சுக்கோங்க பொங்கல் பண்டிகைக்கு முன்னாடி "இந்த" போனுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்! அப்படியென்ன ஸ்பெஷல்?

|

பொங்கல் பண்டிகைக்கு முன்பு இந்தியாவில் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது iQoo 11 5G ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தனித்துவமான அம்சங்களுடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 10-ம் தேதி..

ஜனவரி 10-ம் தேதி..

குறிப்பாக இந்த iQoo 11 5G ஸ்மார்ட்போன் ஜனவரி 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகாப் பார்ப்போம்.

 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

iQOO 11 5G ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனினின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக பெண்கள்! Instagram-ல் சாட் செய்யும் போது மறக்காம இந்த Setting-ஐ ஆன் பண்ணிடுங்க! இல்லனா?குறிப்பாக பெண்கள்! Instagram-ல் சாட் செய்யும் போது மறக்காம இந்த Setting-ஐ ஆன் பண்ணிடுங்க! இல்லனா?

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

iQoo 11 5G ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட வேகத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் 40 சதவீத அதிக மின்திறன் பயன்பாடு, 25 சதவீதம் வேகமான GPU திறன் கொண்டிருக்கிறது. எனவே இந்த iQoo 11 ஸ்மார்ட்போன் அறிமுகமானால் நம்பி வாங்கலாம்.

128ஜிபி ஸ்டோரேஜ் வசதி

iQOO 11 5G ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி மெயின் கேமரா

50எம்பி மெயின் கேமரா

iQOO 11 5G ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

iQOO 11 5G ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, அதேசமயம் சில நிமிடங்களில் இந்த போனை ஃபுல் சார்ஜ் செய்ய முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாகும் இந்த iQOO 11 5G ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாகும் இந்த iQOO 11 5G ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் சேர்த்து iQOO 11 Pro ஸ்மார்ட்போன் சாதனத்தையும் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதில் வெளியான தகவலின்படி iQOO 11 இதுவரை இல்லாத AnTuTu மதிப்பெண்ணை பெற்றுள்ளது. நம்ப முடியாத விதத்தில் 13,23,820 என்ற AnTuTu மதிப்பெண்களை இந்த iQOO 11 சாதனம் பெற்றுள்ளது.

சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்

இந்த மதிப்பெண்ணை இதுவரை ஆண்ட்ராய்டு வரலாற்றில் எந்த ஒரு ஸ்மார்ட் ஃபோனும் எடுத்ததில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த மதிப்பெண் போக, iQOO 11 அதன் சிபியு டெஸ்டிங் இல் 2,70,987 என்ற மதிப்பெண்ணையும், அதேபோல் நம்ப முடியாத வகையில் 6,07,822 என்ற ஜிபியு மதிப்பெண்களையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
new iQOO 11 5G smartphone will launch in India on January 10: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X