5ஜி வசதியுடன் உருவாகும் புதிய ஐபோன் மாடல்.! பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்.!

|

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான இயங்குதளம், தரமான சிப்செட் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் வெளிவருவதால் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

புதிய ஐபோன் எஸ்இ

புதிய ஐபோன் எஸ்இ

மேலும் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி ஆப்பிள் நிறுவனம் வரும் 2022 முதல் காலாண்டில் புதிய ஐபோன் எஸ்இ மாடலை அறிமுகம்செய்வது மட்டுமின்றி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் 'லியோனார்ட்' வால் நட்சத்திரம்.. வெறும் கண்ணிலேயே பார்க்கலாமா?70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் 'லியோனார்ட்' வால் நட்சத்திரம்.. வெறும் கண்ணிலேயே பார்க்கலாமா?

 அறிமுகம் செய்யப்படும்

அதேபோல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் புதிய ஐபோன் எஸ்இ மாடல் ஆனது மிட்-ரேன்ஜ் பிரிவில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக ஆக்பிள் நிறுவனம் 2.5 கோடி முதல் 3 கோடி யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. கணடிப்பாக இந்த சாதனம் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி என்ன இருக்கு இந்து போன்ல- மீண்டும் விலை உயர்வு பெற்ற ரியல்மி சி11 (2021): வரவேற்பு அமோகமா இருக்கே!அப்படி என்ன இருக்கு இந்து போன்ல- மீண்டும் விலை உயர்வு பெற்ற ரியல்மி சி11 (2021): வரவேற்பு அமோகமா இருக்கே!

போன் எஸ்இ மாடலில் 4.7-இன்ச்

மேலும் புதிய ஐபோன் எஸ்இ மாடலில் 4.7-இன்ச் அல்லது 5-இன்ச் டிஸ்பிளே வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5ஜி கனெக்டிவிட்டி, ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர் வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 சீரிஸ் மாடல்களிலும் இந்த ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த ஐபோன் 13 சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விலை உயர்வா அறிவிக்கிறீங்க?இதான் சந்தர்ப்பம்: ஆரம்பிக்கலாங்களா-இந்தியா முழுவதும் 4ஜி சேவை வழங்கும் பிஎஸ்என்எல்விலை உயர்வா அறிவிக்கிறீங்க?இதான் சந்தர்ப்பம்: ஆரம்பிக்கலாங்களா-இந்தியா முழுவதும் 4ஜி சேவை வழங்கும் பிஎஸ்என்எல்

ஐபோன் 13

ஐபோன் 13

ஐபோன் 13 சாதனம் 6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 இல் இயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த சாதனம் ஆப்பிள் A15 பயோனிக் Apple A15 Bionic (5 nm) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமராக்களைப் பொறுத்தவரையில், ஐபோன் 13 ஒரு இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல் முதன்மை அல்ட்ரா வைடு கேமரா f/1.8 துளையுடனும், மற்றொரு 12 மெகாபிக்சல் கேமரா f/1.8 துளையுடனும்வைடு லென்ஸ் கேமராவை கொண்டுள்ளது.

இரண்டு அதுல., இரண்டு இதுல: பார்த்து பார்த்து வடிவமைக்கப்படும் ரெட்மி கே50- இப்படியும் இருக்கலாம்!இரண்டு அதுல., இரண்டு இதுல: பார்த்து பார்த்து வடிவமைக்கப்படும் ரெட்மி கே50- இப்படியும் இருக்கலாம்!

ஆப்பிள் ஐபோன் 13

பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அம்சமும் உள்ளது. வீடியோவை பொறுத்தவரையில் சினிமாட்டிக் மோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் 5ஜி அம்சமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக ஒரு ஒற்றை கேமரா அமைப்பு, 12 மெகாபிக்சல்
தரத்தில் f/2.2 துளையுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 ஐ அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுதல் திட்டமா?- இதுல மட்டும் ஒரு ஸ்பெஷல்: இந்த விலை திட்டத்தில் கூடுதல் டே்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல்!ஆறுதல் திட்டமா?- இதுல மட்டும் ஒரு ஸ்பெஷல்: இந்த விலை திட்டத்தில் கூடுதல் டே்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல்!

 ஸ்மார்ட் டேட்டா மோ

பேட்டரி ஆயுளை பாதுகாக்க ஸ்மார்ட் டேட்டா மோடு அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் பயனர்களுக்கு பிரைவசி முன்பை விட இன்னும் அதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மாக் சார்ஜ்ர் உடன் ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 13 இரட்டை சிம்

ஆப்பிள் ஐபோன் 13 இரட்டை சிம் வசதி கொண்டது. இரண்டு சிம் கார்டுகளும் ஜிஎஸ்எம் ஆதரவை ஆதரிக்கிறது. இது ஒரு 5ஜி சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது. இது நானோ சிம் மற்றும் இசிம் கார்டுகளை ஏற்கும் வசதி கொண்டது. ஐபோன் 13 இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11 a/b/g/n/ac/arm, ஜிபிஎஸ், என்எப்சி, லைட்னிங், 3G, மற்றும் 4G ஆகியவற்றை ஆதரிக்கிறது.

Best Mobiles in India

English summary
New iPhone SE model will be launched next year with 5G feature: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X