ஆப்பிளுக்கு இரண்டே வழிகள் தான் உள்ளன; என்ன செய்ய போகிறார் டிம் குக்.?

அடுத்த ஆப்பிள் 8 ஸ்மார்ட்போன்களில் அட்டகாசமான வண்ணங்கள் சேர்க்கப்படவுள்ளது. ரோஸன்ப்ளப் செக்யூரிட்டீஸ்-ன் 'ஜுன் ஜாங்' முன்வைத்த பரிந்துரையே இது.!

|

ஒருபக்கம் ஐபோன் எக்ஸ்-ல் மேம்பாடுகள் நிகழுமென்று எதிர்பார்க்கப்படுகிறது, மறுபக்கம் ஐபோன் எக்ஸ் பிளஸ் என்கிற மாறுபாடு வெளியாகும், அது ஒரு பெரிய OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது, இதற்கிடையில், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட ஐபோன் 8 மீதான ஆர்வத்தை எப்படி கிளப்புவது என்கிற யோசனையில் கிடைத்த ஐடியா மிகவும் "கலர்புல்" ஆக இருக்கிறது.

ஆப்பிளுக்கு இரண்டே வழிகள் தான் உள்ளன; என்ன செய்ய போகிறார் டிம் குக்.?

<strong>இனிமே " title="இனிமே "நான் ஐபோன் வச்சிருக்கேன்"னு ஒருத்தரும் சீன் போட முடியாது, பாவம்.!" loading="lazy" width="100" height="56" />இனிமே "நான் ஐபோன் வச்சிருக்கேன்"னு ஒருத்தரும் சீன் போட முடியாது, பாவம்.!

ஆம். அடுத்த ஆப்பிள் 8 ஸ்மார்ட்போன்களில் அட்டகாசமான வண்ணங்கள் சேர்க்கப்படவுள்ளது. ரோஸன்ப்ளப் செக்யூரிட்டீஸ்-ன் 'ஜுன் ஜாங்' முன்வைத்த பரிந்துரையே இது.!

டிம் குக்கின் மாஸ்டர் பிளான்.!

டிம் குக்கின் மாஸ்டர் பிளான்.!

(எங்கு பார்த்தாலும் ஐபோன் எக்ஸ் வடிவமைப்பின் கீழ் ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது, இப்படியாக) ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு குட்டி புரட்சியையே ஏற்படுத்தியுள்ள ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ஐ கொண்டு நிறுவனத்தின் சந்தை விளிம்பை அதிகரித்துகொள்ளும் மறுகையில் ஆப்பிள் ஐபோன் 8-ஐ அறிமுகம் செய்து, மறக்கப்பட்ட நிறுவனத்தின் இதர காரியங்களை சாதித்துக்கொள்வதே, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக்கின் மாஸ்டர் பிளான்.

அதாவது, நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு விருப்பங்கள்.!

அதாவது, நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு விருப்பங்கள்.!

ரோஸன்ப்ளப் செக்யூரிட்டீஸ்-ன் ஜுன் ஜாங்கின் படி, "இந்த ஆண்டுக்கு பின்னர் வெளியாகும் ஐபோன் 8 ஆனது, பல வகையான எல்சிடி மாடல்கள் வெளியாகும், உடன் பல வண்ண மாறுபாடுகளையும் கொண்டிருக்கலாம். அதாவது, நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு விருப்பங்கள் உள்ளிட்ட பிரகாசமான வண்ணங்களின் கீழ் வெளியாகலாம். அது வெளிப்படையாக "இளைய நுகர்வோர் சந்தையை" இலக்காகக் கொள்ளும் ஒரு முயற்சியாக இருக்கும்".

வேறுவிதமாக கூறினால், அடுத்த தலைமுறை ஐபோன் 5சி.!

வேறுவிதமாக கூறினால், அடுத்த தலைமுறை ஐபோன் 5சி.!

முந்தைய வதந்திகளின் படி, ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்களின் அடிப்படையின் கீழ், மொத்தம் மூன்று ஐபோன் மாடல்களை வெளியிடும். அதாவது, ஒரு 5.8 அங்குல மற்றும் 6.5 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன்களுடன் சேர்த்து ஒரு 6.1 அங்குல எல்சிடி ஐபோன் ஒன்றும் வெளியாகும். சுவாரசியமான விஷயம் என்னவெனில், இவைகள் 799 அமெரிக்க டாலர்கள் என்கிற மிக குறைந்த விலை நிர்ணயத்தின் கீழ் தான் வெளியாகும். வேறுவிதமாக கூறினால், அடுத்த தலைமுறை ஐபோன் 5சி-ஐ நாம் எதிர்பார்க்கலாம்.

ஆப்பிள் நிறுவனத்திற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது.!

ஆப்பிள் நிறுவனத்திற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது.!

ஐபோன் 5சி என்பது விற்பனை அளவில் தோல்வி அடைந்த ஐபோன்கள் ஆகும். ஆக வெளியாகும் கலர் கலரான ஐபோன்கள் ஆனது ஐபோன் 8எஸ் என்கிற பெயரின் கீழும் வெளியாகலாம். இது உண்மையாகும் பட்சத்தில், ஆப்பிள் ஐபோன் 8எஸ் ஆனது புதிய சந்தைகளை எட்டி, புதிய புள்ளிவிவரங்கள் அடையும் என்று நம்பலாம். மறுகையில் ஆப்பிள் நிறுவனத்தின் சரிவு இந்த ஆண்டும் தொடர்கிறது. இந்நிலைப்பாட்டில், ஆப்பிள் நிறுவனத்திற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று விலைகளை உயர்த்தி, குறைந்த விற்பனையை சந்தித்து, வீழிச்சியை ஏற்றுக்கொள்வது, மற்றொன்று 'புதிய சந்தைகளைக் கண்டுபிடித்து அதில் வளர்ச்சி அடைவது.

குறைந்த விலை, நாகரீக எட்ஜ் வடிவமைப்பு.!

குறைந்த விலை, நாகரீக எட்ஜ் வடிவமைப்பு.!

ஆகமொத்தம் ஐபோன் எக்ஸ் (2018) பதிப்பின் விற்பனையை, அடுத்து வெளியாகும் ஐபோன் எக்ஸ் பிளஸ் கவனித்துக்கொள்ளும். மறுகையில், வழக்கமாக வெளியாகும் ஐபோன் 8எஸ் ஆனது, குறைந்த விலை நிர்ணயம் (எல்சிடி டிஸ்பிளே) மற்றும் புதிய வண்ணங்கள் கொண்ட ஒரு வேடிக்கையான மற்றும் நாகரீக எட்ஜ் வடிவமைப்பை கொண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அத்துணை எதிர்பார்ப்புகளுக்கும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிகழும் ஐபோன் 8எஸ் வெளியீட்டில் பதில்கள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
New iPhone Leak Highlights A Colorful Design Decision. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X