கைவிட்டது Apple.. இந்த 3 iPhone-ல் ஒன்னு உங்ககிட்ட இருந்தாலும்.. அவ்ளோ தான்.. இனி ஒன்னும் பண்ண முடியாது!
அடுத்த 5 நாட்களுக்கு ஆப்பிளின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (Apple WWDC 2023) நடக்வுள்ளதால் உலகம் முழுவதுமுள்ள ஆப்பிள் பயனர்கள் மற்றும் ரசிகர்கள் "செம்ம ஆர்வமாக" இருக்கும் நேரத்தில் குறிப்பிட்ட 3 ஐபோன் மாடல்களை வைத்திருக்கும் பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ் (Bad News) வந்துள்ளது!
அது என்னவென்றால், ஆப்பிளின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ள லேட்டஸ்ட் ஐஓஎஸ் 17 (Latest iOS 17) ஆனது குறிப்பிட்ட 3 ஐபோன்களுக்கு வரவே வராது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதென்ன மாடல்கள்? அவைகளுக்கு ஏன் ஐஓஎஸ் 17 கிடைக்காது? வேறு என்னென்ன ஐபோன்களுக்கு கிடைக்கும்? இதோ விவரங்கள்:

எந்தெந்த ஐபோன்கள் ஐஓஎஸ் 17 அப்டேட்டை பெறாது? மேக்ரூமர்ஸ் அறிக்கையின்படி, ஐபோன் 8 (iPhone 8) ஐபோன் 8 பிளஸ் (iPhone 8 Plus) மற்றும் ஐபோன் எக்ஸ் (iPhone X) ஆகிய மூன்றுமே புதிய ஐஓஎஸ் 17 அப்டேட்டை பெறாது. ஏனெனில் புதிய ஐஓஎஸ் பதிப்புகள் அவற்றின் பழைய வன்பொருளுடன் (Old hardware) இணக்கமாக இருக்காது.
இந்த 3 ஐபோன்கள் மட்டுமின்றி, ஐபோன் 6ஏ (iPhone 6a), ஐபோன் 6எஸ் பிளஸ் (iPhone 6s Plus), ஐபோன் 7 (iPhone 7), ஐபோன் 7 பிளஸ் (iPhone 7 Plus), ஒரிஜினல் ஐபோன் எஸ்இ (Original iPhone SE) போன்ற மாடல்களுக்கு, இனிமேல் முக்கிய அப்டேட்கள் (Major Updates) கிடைக்காது என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆக மேற்கண்ட ஐபோன் மாடல்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வைத்து இருந்தாலும் கூட, முடிந்த வேகத்தில் புதிய மாடலுக்கு அப்கிரேட் (Upgrade) ஆவது நல்லது. அப்போது தான் லேட்டஸ்ட் ஐஒஸ் 17-ஐயும் அதன் வழியாக கிடைக்கும் புதிய அம்சங்களையும் உங்களால் அனுபவிக்க முடியும்.
எந்தெந்த ஐபோன்களுக்கு ஐஓஎஸ் 17 அப்டேட் கிடைக்கும்? ஐபோன் எக்ஸ்எஸ் / எக்ஸ்எஸ் மேக்ஸ் மேக்ஸ், ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட சற்றே பழைய மாடல்களுக்கும்..
ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் எஸ்இ (2022), ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்,உள்ளிட்ட லேட்டஸ்ட் மாடல்களுக்கும் ஐஓஎஸ் 17 அப்டேட் கிடைக்கும்.
பழைய ஐபோன்கள் (Old iPhones) மட்டுமல்ல சில பழைய ஐபேட்கள் (Old iPads) கூட லேட்டஸ்ட் பேட்ஓஎஸ் 17 அப்டேட்டை (PadOS 17 Update) பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. முதல் தலைமுறை ஐபேட் ப்ரோ 9.7-இன்ச், ஐபேட் ப்ரோ 12.9-இன்ச் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஐபேட் போன்ற மாடல்களானது லேட்டஸ்ட் பேட்ஓஎஸ்-ஐ பெறாது.


Click it and Unblock the Notifications








