Home
Mobile

வளைச்சு, வளைச்சு போட்டோ எடுக்க 60MP செல்பி கேமரா:Infinix Zero 20 அறிமுகம்: என்ன விலை?

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 20 எனும் ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 60எம்பி செல்பி கேமரா, தரமான சிப்செட், தனித்துவமான வடிவமைப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

விரைவில்

தற்போது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஜீரோ 20 விலை

இன்பினிக்ஸ் ஜீரோ 20 விலை

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Infinix Zero 20 போனின் விலை $460 (இந்திய மதிப்பில் ரூ.37,570) என்று கூறப்படுகிறது. மேலும் கோல்ட் மற்றும் கிரே நிறங்களில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

இன்பினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்தஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

108எம்பி மெயின் கேமரா

108எம்பி மெயின் கேமரா

இந்த Infinix Zero 20 ஸ்மார்ட்போன் 108எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 60எம்பி கேமரா இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும்.

மீடியாடெக் ஹிலியோ ஜி99 சிப்செட்

மீடியாடெக் ஹிலியோ ஜி99 சிப்செட்

புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹிலியோ ஜி99 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக XOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

256ஜிபி ஸ்டோரேஜ் வசதி

256ஜிபி ஸ்டோரேஜ் வசதி

Infinix Zero 20 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்
இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

4500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 20 ஸ்மார்ட்போன் மாடல். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

இந்த போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக தான் உள்ளன. ஆனால் இது 5ஜி போன் கிடையாகது. ஆதாவது 4ஜி வோல்ட்இ வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Infinix Zero 20 With 60MP Selfie Camera Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X