Xiaomi, Samsung ஐ ஓடவிட்ட புது போன்.! கம்மி விலையில் இதுவொரு பிரமாண்ட படைப்பு.!

|

இந்தியாவில் Infinix Zero Ultra மற்றும் Infinix Zero 20 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த போன்கள் முதலில் அக்டோபரில் அறிமுகமானது. ஆனால் இன்பினிக்ஸ் ஜீரோ 20 இந்திய வேரியண்ட் மாடல் உலகளாவிய எடிஷன் பதிப்போடு ஒப்பிடும்போது வேறுபட்ட ஹார்டுவேர் உடன் வருகிறது.

மறுபுறம், Infinix Zero Ultra ஆனது OIS மற்றும் 180W தண்டர் சார்ஜிங் ஆதரவுடன் 200MP சாம்சங் ISOCELL HP1 பிரைமரி சென்சார் உடன் வருகிறது. இது இந்தியாவின் முதல் பிரமாண்டமான பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. காரணம், இந்த டிவைஸ் வெறும் 11 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து முடிகிறது. இந்த போன் MediaTek Dimensity 920 சிப்செட் உடன் வருகிறது.

Xiaomi, Samsung ஐ ஓடவிட்ட புது போன்.! கம்மி விலையில் பிரமாண்ட படைப்பு!

மறுபுறம், Infinix Zero 20 ஆனது 60MP செல்ஃபி ஸ்னாப்பருடன் வருகிறது மற்றும் OISக்கான ஆதரவு உள்ளது. மேலும் இது MediaTek Helio G99 SoC ஆல் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் முழு விவரக்குறிப்புகள் மற்றும் விலைகளைப் பற்றி பார்க்கலாம்.

Infinix Zero Ultra மற்றும் Infinix Zero 20 போனின் விலை
Infinix Zero Ultra ஒரே ஒரு 8GB + 128GB ஸ்டோரேஜ் மாடல் உடன் ரூ. 29,999 என்ற விலையில் டிசம்பர் 25 முதல் Flipkart வழியாக விற்பனைக்கு வரும். இந்த போன் காஸ்லைட் ஸ்லிவர் மற்றும் ஜெனிசிஸ் நோயர் வண்ணங்களில் வருகிறது. Infinix Zero 20 விலை ரூ.15,999 ஆக இருக்கிறது. இது கிரீன் பேண்டஸி, கிளிட்டர் கோல்ட் மற்றும் ஸ்பேஸ் கிரே வண்ணங்களில் வருகிறது. இதுவும் டிசம்பர் 25 ஆம் தேதி முதல் மதியம் 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட் (Flipkart) வழியாக இந்த போன் கிடைக்கும்.

Xiaomi, Samsung ஐ ஓடவிட்ட புது போன்.! கம்மி விலையில் பிரமாண்ட படைப்பு!

இன்ஃபினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா (Infinix Zero Ultra) சிறப்பம்சம்

  • 6.8 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே
  • MediaTek Dimensity 920 (6nm) சிப்செட்
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 12 ஸ்கின்
  • 200MP பிரைமரி கேமரா
  • 13MP அல்ட்ரா-வைட் கேமரா
  • 2MP டெப்த் சென்சார்
  • டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
  • 32MP செல்ஃபி ஷூட்டர்
  • 180W தண்டர் சார்ஜிங் ஆதரவு
  • 4,500mAh பேட்டரி

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 20 5ஜி (Infinix Hot 20 5G) சிறப்பம்சம்

  • 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே
  • MediaTek Helio G99 சிப்செட்
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 12
  • 108MP பிரைமரி கேமரா
  • 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
  • 2MP மேக்ரோ ஷூட்டர்
  • டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
  • 60 MP செல்ஃபி ஷூட்டர்
  • 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 4,500mAh பேட்டரி
Xiaomi, Samsung ஐ ஓடவிட்ட புது போன்.! கம்மி விலையில் பிரமாண்ட படைப்பு!

பிரமாண்டமான கேமரா அம்சம் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிற இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் உண்மையிலேயே சிறந்த விலையில் கிடைக்கிறது. முன்னணி நிறுவனங்களான சியோமி (Xiaomi) மற்றும் சாம்சங் (Samsung) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இந்த இன்பினிக்ஸ் போன்கள் மிகவும் கம்மியான விலையில் 200 MP மற்றும் 108 MP கேமரா அம்சங்களை 180W பாஸ்ட் சார்ஜிங் உடன் வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை 5ஜி உடன் வருவது கூடுதல் சிறப்பு.

Best Mobiles in India

English summary
New Infinix Zero 20 and Zero Ultra 5G Is The Great Phone At Bargain Price To Beat Xiaomi and Samsung

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X