64எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது புதிய Infinix போன்.!
இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் நோட் 30ஐ எனும் ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இன்பினிக்ஸ் நோட் 30ஐ போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய இன்பினிக்ஸ் நோட் 30ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.66-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இந்த இன்பினிக்ஸ் நோட் 30ஐ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். பின்பு XOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
புதிய இன்பினிக்ஸ் நோட் 30ஐ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
64எம்பி பிரைமரி கேமரா + டெப்த் சென்சார் + மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 30ஐ ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 30ஐ ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. ஆனால் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 30ஐ போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை இன்பினிக்ஸ். கூடிய விரைவில் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








