முரட்டுத்தனமான 5ஜி ஸ்மார்ட்போனை இறக்கிவிடும் Infinix.! ரெடியா இருங்க..
ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி என அனைத்து சாதனங்களையும் கம்மி விலையில் அறிமுகம் செய்து வருகிறது இன்பினிக்ஸ் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது கம்மி விலை தரமான அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் சாதனங்கள் வெளிவருகின்றன.
இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி: இந்நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஜேபிஎல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன். மேலும் 108எம்பி ட்ரிபிள்; ரியர் கேமரா, 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
அதேபோல் முன் மற்றும் பின்பக்க கேமராக்களில் இருந்து ஒரே நேரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் டூயல் டிஸ்பிளே அம்சத்தையும் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன் ஆதரிக்கிறது. எனவே இந்த போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் நோட் 30ஐ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
இன்பினிக்ஸ் நோட் 30ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.66-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இந்த இன்பினிக்ஸ் நோட் 30ஐ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். பின்பு XOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இன்பினிக்ஸ் நோட் 30ஐ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது
நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
64எம்பி பிரைமரி கேமரா + டெப்த் சென்சார் + மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 30ஐ ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. ஆனால் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 30ஐ போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை இன்பினிக்ஸ். கூடிய விரைவில் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications