நாயர் கடையில 'டீ' சேல்ஸ் ஆகுற மாதிரி விற்பனையாகும் புதிய Infinix 5ஜி போன்.! கம்மி விலை..
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் கம்மி விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளன. எனவே இந்த கம்மி விலை 5ஜி போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் சமீபத்தில் இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 30 (Infinix Hot 30) எனும் போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்நிலையில் இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போன் ஆனது இன்று கம்மி விலையில் (18-7-2023) விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்க முடியும். 4ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ஸடோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.13,499-ஆக உள்ளது.

அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். பின்பு இப்போது இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக 2460 × 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6020 எம்எச்எச் 7என்எம் பிராசஸர் (MediaTek Dimensity 6020 7nm processor) உடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் XOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் கேமராவுடன் குவாட் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய இன்பினிக்ஸ் போன்.
இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போனில் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த போன் குறைந்த எடையில் வெளிவந்துள்ளது. எனவே இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








