ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க :Infinix அறிமுகம் செய்த புதிய போன்: முக்கியமான வசதி இல்லை.!

|

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் தற்போது பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபுல் எச்டி பிளஸ் வசதி

ஃபுல் எச்டி பிளஸ் வசதி

முதலில் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த புதிய போன் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் மாடல்.

ரூ.12,000 முதல் ரூ.49,999 வரை.. டிச.1 மற்றும் டிச.2-இல் அடுத்தடுத்து அறிமுகமாகும் ஐந்து புதிய 5G போன்கள்!ரூ.12,000 முதல் ரூ.49,999 வரை.. டிச.1 மற்றும் டிச.2-இல் அடுத்தடுத்து அறிமுகமாகும் ஐந்து புதிய 5G போன்கள்!

ஹீலியோ ஜி96 சிப்செட்

ஹீலியோ ஜி96 சிப்செட்

இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் வசதி உள்ளது. இப்போது வரும் பட்ஜெட் விலை போன்களில் அதிகம் இடம்பெறுவது இந்த சிப்செட் வசதி தான். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ். மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

புதிய இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.

இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க..ரூ.750 பட்ஜெட்டில் கிடைக்கும் ஜியோவின் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள்.!இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க..ரூ.750 பட்ஜெட்டில் கிடைக்கும் ஜியோவின் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

128ஜிபி ஸ்டோரேஜ் வசதி

128ஜிபி ஸ்டோரேஜ் வசதி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

என்னிடம் வராதீர்கள், வகுந்து விடுவேன்.. நக்கலாக பதில் சொன்ன Elon Musk-ஐ என்னிடம் வராதீர்கள், வகுந்து விடுவேன்.. நக்கலாக பதில் சொன்ன Elon Musk-ஐ "வறுத்துவிட்ட" அமெரிக்க அதிகாரி!

 முக்கியமான வசதி?

முக்கியமான வசதி?

இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களுமே அருமையாகத் தான் உள்ளது. ஆனால் முக்கியமான வசதி இதில் இல்லை. அதாவது 5ஜி வசதி இந்த ஸ்மார்ட்போனில் இல்லை. 4ஜி வசதியுடன் தான் இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது வரும் பட்ஜெட் விலை போன்களில் கூட 5ஜி சேவை உள்ளது. ஆனால் இந்த போனில் இல்லை என்பது மிகப் பெரிய வருத்தம்.

சொன்னா நம்புவீங்களா? பார்க்க பிரீமியம் லுக்ல இருக்குற இந்த Smartphone-ன் விலை வெறும் ரூ.7800 தான்!சொன்னா நம்புவீங்களா? பார்க்க பிரீமியம் லுக்ல இருக்குற இந்த Smartphone-ன் விலை வெறும் ரூ.7800 தான்!

கனெக்டிவிட்டி

குறிப்பாக 4ஜி,வைஃபை 802.11, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் கருப்பு, நீலம், ஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போனின் விலை PHP 8,499 (இந்திய மதிப்பில் ரூ.12,200) ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
New Infinix Hot 20S smartphone launched with 50MP rear camera priced at Rs 12,200: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X