Home
Mobile

HTC அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்: 64எம்பி கேமரா, 6.5-இன்ச் Full HD+ டிஸ்பிளே.. சேல்ஸ் பிச்சுக்கபோது!

எச்டிசி நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. எனவேதான் இந்நிறுவனம் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் எச்டிசி நிறுவனம் தற்போது ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது எச்டிசி யூ23 (HTC U23) எனும் எஸ்மார்ட்போனை தான் தற்போது எச்டிசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தைவானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

64எம்பி கேமரா: HTC அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.!

எச்டிசி யூ23 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல அசத்தலான டிஸ்பளே அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (4என்எம்) சிப்செட் உடன் அட்ரினோ 644 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த எச்டிசி யூ23 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் கொடுக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய எச்டிசி யூ23 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த எச்டிசி யூ23 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்யலாம். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இந்த எச்டிசி யூ23 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் எச்டிசி யூ23 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

4600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த எச்டிசி யூ23 ஸ்மார்ட்போன். பின்பு 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய எச்டிசி போன். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

64எம்பி கேமரா: HTC அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.!

தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி67 (Dust and water resistant (IP67)) சான்றிதழ் கொண்டுள்ளது இந்த எச்டிசி யூ23 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.

ப்ளூ மற்றும் ரோலண்ட் வயலட் நிறங்களில் இந்த எச்டிசி யூ23 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் ஜூலை 25 முதல் தைவானில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த போன் விற்பனைக்கு வரும்போதுதான் விலை தெரியவரும். தரமான சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New HTC U23 with 64MP rear camera, 4600mAh battery launched : Check Sale Date, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X