Home
Mobile

ஆட்டத்துக்கு நாங்க வரலாமா.. 108எம்பி கேமராவுடன் வருகிறது புதிய HTC ஸ்மார்ட்போன்.!

எச்டிசி நிறுவனம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்போது தான் தொடர்ந்து புதிய புதிய போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மற்ற செல்போன் நிறுவனங்களை விட எச்டிசி நிறுவனம் தனித்துவமான வடிவமைப்புடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எச்டிசி நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் மே 18-ம் தேதி புதிய எச்டிசி யூ23 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது எச்டிசி நிறுவனம். குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

108எம்பி கேமராவுடன் வருகிறது புதிய HTC ஸ்மார்ட்போன்.!

மேலும் ஆன்லைனில் கசிந்த எச்டிசி யூ23 ப்ரோ போனின் சில அம்சங்களைப் பார்ப்போம். அதாவது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் வசதியுடன் இநத அட்டகாசமான எச்டிசி யூ23 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் கேமிங் பயன்பாடுகளுக்கு மிக அருமையாக உதவும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

108எம்பி கேமராவுடன் வருகிறது புதிய HTC ஸ்மார்ட்போன்.!

அதேபோல் 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் AMOLED டிஸ்பிளே, 4500 எம்ஏஎச் பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், 108எம்பி குவாட்-ரியர் கேமரா மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் மே 18-ம் தேதி எச்டிசி யூ23 ப்ரோ போன் அறிமுகமாகும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.82-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்டிசி போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Unisoc T606 12என்எம் பிராசஸர் உடன் Mali G57 MP1 GPU ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய எச்டிசி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த எச்டிசி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

108எம்பி கேமராவுடன் வருகிறது புதிய HTC ஸ்மார்ட்போன்.!

4600 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போன் மாடல். இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போன் விற்பனை விவரம் மற்றும் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை எச்டிசி நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New HTC U23 Pro will be launched on May 18: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X