ஐபோன் எக்ஸ்; எல்ஜி; கேலக்ஸி எஸ்8-ஐ குறிவைத்து களமிறங்கும் பெஸல்லெஸ் யூ11ப்ளஸ்.!

5 அடி முதல் 1.5 மீட்டர் ஆழம் வரையிலாக சுமார் 30 நிமிடங்கள் வரை தண்ணீரின் கீழ் பாதுகாப்பாக இருக்கும் திறன் கொண்டிருக்கலாம்.

|

சமீபத்தில் எச்டிசி நிறுவனத்தின் அடுத்த ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் சாதனமான யூ11 தொடர் ஸ்மார்ட்போன் சார்ந்த லீக்ஸ் தகவலொன்று வெளியானது. பின்பக்க பக்க கேமரா மற்றும் கைரேகை சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கி வெளியான அக்கருவி எச்டிசி யூ11+ ஸ்மார்ட்போனாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

ஐபோன் எக்ஸ்; எல்ஜி; கேலக்ஸி எஸ்8-ஐ குறிவைத்து களமிறங்கும் யூ11ப்ளஸ்.!

இந்நிலைப்பாட்டில் தற்போது வெளியாகியுள்ள தகவலொன்று கூறப்படும் யூ11+ ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அம்சங்களை வெளிப்படுத்தும் முன்பக்க குழுவை வெளிப்படுத்தியுள்ளது.

18: 9 என்ற விகிதம்

18: 9 என்ற விகிதம்

ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த சமீபத்திய போஸ்டரில் காணப்படும் எச்டிசி சாதனம், கிட்டத்தட்ட ஸீரோ பெஸல்லெஸ் வடிவமைப்பில் அருகாமையில் உள்ளது. இது யூ11 ஸ்மார்ட்போனின் உயர்மட்ட மாடல் என்பதிலும், இது 18: 9 என்ற விகிதம் ஒரு திரை அளவை கொண்டதாக இருக்கும் என்பதும் உறுதி.

புதிய அளவிலான காட்சி தரநிலை

புதிய அளவிலான காட்சி தரநிலை

இந்த அளவிலான டிஸ்பிளேவை கண்டு ஆச்சரியப்பட தேவையில்லை. ஏனெனில், எல்ஜி, சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற எச்டிசி நிறுவனத்தின் போட்டியாளர்கள் ஏற்கனவே தங்கள் புதிய போன்களில் புதிய அளவிலான காட்சி தரநிலைகளை இடம்பெற செய்து வருகின்றன.

இன்பினிட்டி டிஸ்பிளேவை போன்றிருக்க அதிக வாய்ப்பு.!

இன்பினிட்டி டிஸ்பிளேவை போன்றிருக்க அதிக வாய்ப்பு.!

ஆக, போட்டி முனைப்புடன் எச்டிசி நிறுவனத்தின் மூலம் வெளிவரும் இக்கருவியின் ஃபுல்வியூ டிஸ்பிளேவானது, அடிப்படையிலேயே ஐபோன் எக்ஸ், எல்ஜி ஜி6 /வி30 அல்லது கேலக்ஸி எஸ்8 /நோட்8 தொடரின் இன்பினிட்டி டிஸ்பிளேவை போன்றிருக்க அதிக வாய்ப்புள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

இதர அம்சங்களை பொறுத்தமட்டில், எச்டிசி யூ 11+ ஆனது 6.0 அங்குல டபள்யூக்யூஎச்டி + (2960x1440பி) எல்சிடி அளவிலான 538 பிபிஐ தீர்மானம் கொண்ட டிஸ்பிளே கொண்டிருக்கலாம்.

தண்ணீரின் கீழ் பாதுகாப்பாக இருக்கும் திறன்

தண்ணீரின் கீழ் பாதுகாப்பாக இருக்கும் திறன்

மேலும் இக்கருவி ஐபி68 சான்றிதழ் கொண்ட ஒரு பளபளப்பான உலோக மற்றும் கண்ணாடி கலப்பு ஷெல் கொண்டிருக்கலாம். அதாவது 5 அடி முதல் 1.5 மீட்டர் ஆழம் வரையிலாக சுமார் 30 நிமிடங்கள் வரை தண்ணீரின் கீழ் பாதுகாப்பாக இருக்கும் திறன் கொண்டிருக்கலாம்.

12எம்பி கேமரா

12எம்பி கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், இக்கருவி 8எம்பி செல்பீ கேமராவும், பின்புறத்தில் எப் / 1.7 துளை மற்றும் இரட்டை தொனியில் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்ட 12எம்பி கேமராவும் இடம்பெறலாம்.

4 ஜிபி / 6 ஜிபி ரேம்

4 ஜிபி / 6 ஜிபி ரேம்

க்வால்காம் ஸ்னாப் 835 ஆக்டா-கோர் செயலி, ஒரு அட்ரெனோ 540 ஜிபியூ உடனான 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி,/128ஜிபி சேமிப்பு (மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக மெமரி நீட்டிப்பு ஆதரவு) ஆகியவைகளுடன் 3930எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம்

வயர்லெஸ் சார்ஜிங் வசதி

வயர்லெஸ் சார்ஜிங் வசதி

அண்மையில் வெளியிடப்பட்ட டீஸர், எச்டிசியூ11+ ஆனது வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதியன்று தைவான் நகரில், அதன் புதிய யூரோ11 தொடர் தொலைபேசியை வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New HTC U11+ teaser reveals display feature: All you need to know about Android flagship. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X