குறைனு ஒன்னு சொல்லுங்க.. டிவி தர டிஸ்ப்ளே உடன் கம்மி விலையில் Honor X40 GT!

|

Honor X40 GT ஸ்மார்ட்போனானது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது. பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Honor X40 GT ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்

Honor X40 GT ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்

Honor X40 GT ஸ்மார்ட்போன் நேற்று (வியாழக்கிழமை) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனானது 144Hz ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் உள்ளது. 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இதில் உள்ளது.

கிராஃபைட் கூலிங் சிஸ்டம் உடன் கேமிங்கை மையமாக வைத்து இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. Honor X40 GT ஆனது 4800 எம்ஏஎச் பேட்டரி உடன் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கிறது.

Honor X40 GT விலை

Honor X40 GT விலை

Honor X40 GT ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.

இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 1,999 (தோராயமாக ரூ.22,900) எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 2,299 (தோராயமாக ரூ.26,300) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

உலகளாவிய கிடைக்கும் தன்மை..

உலகளாவிய கிடைக்கும் தன்மை..

இந்த இரண்டு மாடல்களும் மேஜிக் நைட் ப்ளாக், ரேசிங் ப்ளாக் மற்றும் டைட்டானியம் எம்ப்டி சில்வர் ஆகிய வண்ண விருப்பிங்களில் வெளியாகி இருக்கிறது.

தற்போது இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் முன்பதிவுக்கு கிடைக்கிறது. புதிய ஹானர் ஸ்மார்ட்போன்கள் இந்த மாத இறுதியில் அங்கு விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் எக்ஸ்40 ஜிடி இன் உலகளாவிய கிடைக்கும் தன்மை மற்றும் விலை குறித்த விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

ஹானர் எக்ஸ்40 ஜிடி சிறப்பம்சங்கள்

ஹானர் எக்ஸ்40 ஜிடி சிறப்பம்சங்கள்

ஹானர் எக்ஸ்40 ஜிடி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான மேஜிக் யுஐ 6.1 மூலம் இயங்குகிறது.

144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 480 ஹெர்ட் டச் சாம்பிளிங் ரேட் உடனான 6.81 இன்ச் ஃபுல் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

செல்பி ஷூட்டர் ஆனது துளை பஞ்ச் கட்அவுட் வசதியோடு டிஸ்ப்ளேயில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மிகவும் மெல்லிய பெசல்கள் உள்ளது.

மேம்பட்ட சிப்செட் ஆதரவு

மேம்பட்ட சிப்செட் ஆதரவு

இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் மேம்பட்ட சிப்செட் ஆதரவு உள்ளது. ஹானர் எக்ஸ்40 ஜிடி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் வேகமான செயல்திறனை வழங்குகிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இதில் இருக்கிறது. ரேம் விரிவாக்க வசதியும் இதில் உள்ளது.

கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேக கூலிங் சிஸ்டம்

கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேக கூலிங் சிஸ்டம்

புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் ஜிபியு டர்போ எக்ஸ் கிராஃபிக்ஸ் ஆதரவு இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு உகந்ததாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன் வெப்பமாவதை தடுப்பதற்கு என எட்டு அடுக்கு கிராஃபைட் கூலிங் பேட் உடன் 13 அடுக்கு விசி திரவ குளிரூட்டும் அமைப்பு இருக்கிறது.

Honor X40 GT ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

Honor X40 GT ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

Honor X40 GT ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 50 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா ஆதரவு இருக்கிறது.

பின்புறத்தில் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவும் இருக்கிறது. ஹானர் எக்ஸ்40 ஜிடி ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்பி ஷூட்டர் வசதி உள்ளது.

66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

5ஜி, ப்ளூடூத், வைஃபை, என்எஃப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது.

பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது.

ஸ்மார்ட்போனில் 4800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றிருக்கிறது.

Best Mobiles in India

English summary
New Honor X40 GT Smartphone Launched With 144Hz Refresh Rate Display at Mid Range Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X