Home
Mobile

அடேங்கப்பா..விலை இவ்வளவு கம்மி தானா.! அறிமுகமானது புதிய Honor ஸ்மார்ட்போன்.!

ஹானர் நிறுவனம் தற்போது அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களைக் கொண்ட போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம்.

அதாவது ஹானர் நிறுவனம் தற்போது ஹானர் பிளே 40சி (Honor Play 40C) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விலை இவ்வளவு கம்மி தானா.! அறிமுகமானது புதிய Honor ஸ்மார்ட்போன்.!

ஹானர் பிளே 40சி ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1612x720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பிளே 40சி ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனில் அட்ரினோ 619ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு MagicOS 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஹானர் பிளே 40சி ஸ்மார்ட்போன் 13எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் இந்த ஹானர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஹானர் பிளே 40சி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸடோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

விலை இவ்வளவு கம்மி தானா.! அறிமுகமானது புதிய Honor ஸ்மார்ட்போன்.!

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஹானர் பிளே 40சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ள இந்த புதிய போன்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹானர் பிளே 40சி ஸ்மார்ட்போனின் விலை CNY 899 (இந்திய மதிப்பில் ரூ.10,300). மேலும் இந்த ஸ்மார்ட்போன் மேஜிக் நைட் பிளாக், இங்க் ஜேட் கிரீன் மற்றும் ஸ்கை ப்ளூ நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Honor Play 40c launched with Snapdragon 480 chipset: Check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X