Home
Mobile

சபாஷ் சரியான போட்டி: ரூ.13,000க்கு இப்படி ஒரு 5G ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கல!

ஹானர் நிறுவனம் சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது நிறுவனம் Honor Play 40 Plus என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 6000 எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி கேமரா உடன் வெளியாகி இருக்கிறது. இத்தனை அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்கள்

6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்கள்

புதிய ஹானர் ப்ளே 40 ஆனது டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6000 எம்ஏஎச் பேட்டரி, எச்டி+ டிஸ்ப்ளே என பல மேம்பட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனானது தற்போது சீன சந்தையில் அறிமுகமாகி இருந்தாலும் இந்தியா உட்பட பிற சந்தையில் விரைவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

அறிமுகத்திற்கு தடை ஆக இருக்க வாய்ப்பு

ஹானரின் தாய் நிறுவனமான ஹூவாய் மீது அமெரிக்கா கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது. இது இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீட்டிற்கு தடை ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Honor Play 40 Plus அம்சங்கள்

Honor Play 40 Plus அம்சங்கள்

Honor Play 40 Plus சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த புதிய ஹானர் ப்ளே 40 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியுடனான 6.74 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 720 x 1600 பிக்சல்கள் எச்டி+ தீர்மானத்தை கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்ட் 12 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்ட் 12 ஓஎஸ் ஆதரவு

இந்த புதிய ஹானர் ப்ளே 40 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பிற ஹானர் போன்களைப் போன்றே இந்த புதிய ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான மேஜிக் யுஐ 6.1 மூலம் இயங்குகிறது.

50 எம்பி பிரைமரி கேமரா ஆதரவு

50 எம்பி பிரைமரி கேமரா ஆதரவு

இந்த புதிய ஹானர் ப்ளே 40 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஹானர் ப்ளே ஸ்மார்ட்போனில் மிகப் பெரிய பேட்டரி இருக்கிறது. அதாவது இதில் 6000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றிருக்கிறது. இதை சார்ஜ் செய்ய 22.5 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

23 மணிநேர வீடியோ ப்ளேபேக் ஆதரவு

23 மணிநேர வீடியோ ப்ளேபேக் ஆதரவு

மேம்பட்ட பேட்டரி செயல்திறன் இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஒரே சார்ஜிங்கில் 23 மணிநேர வீடியோ ப்ளேபேக் இயக்க முடியும் என ஹானர் குறிப்பிடுகிறது.

Honor Play 40 Plus ஸ்மார்ட்போனில் ப்ளூடூத், வைஃபை, யூஎஸ்பி-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு விருப்பங்கள் இருக்கிறது. இத்தனை அம்சங்கள் கொண்ட புதிய ஹானர் ப்ளே 40 ஸ்மார்ட்போனானது மலிவு விலையில் கிடைக்கிறது.

Honor Play 40 Plus விலை

Honor Play 40 Plus விலை

Honor Play 40 Plus விலை குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,199 (தோராயமாக ரூ.13710) எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலைதோராயமாக ரூ.15,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், சில்வர், வயலட் மற்றும் ப்ளூ என்ற வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. புதிய Honor Play 40 Plus ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் இந்தியாவில் இதே விலையில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். அதேபோல் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களிடையே பலத்த போட்டியை புதிய Honor Play 40 Plus ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Best Mobiles in India

English summary
Honor Play 40 Plus launched with 6000mAh battery, 50MP camera at Rs,13,000 Range
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X