14000mAh பேட்டரி உடன் புது போன்.. நின்னு விளையாடும் HONOR நிறுவனம்.. ஆடிப்போன மொபைல் மார்க்கெட்!
ஹானர் (Honor) நிறுவனத்திற்கு 11000எம்ஏஎச் பேட்டரி (11000mAh Battery) கொண்ட ஹானர் எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் (Honor X80 Pro Max) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது போதவில்லை என்பது போல் தெரிகிறது. அதன் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறனை இன்னும் அதிகரிக்க விரும்புவது போல் தெரிகிறது.
11000எம்ஏஎச் பேட்டரியை தொடர்ந்து ஹானர் நிறுவனம் இந்த எல்லையை இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லத் தயாராகி வருகிறது. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி, ஹானர் நிறுவனத்தின் 14,000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போன் ஆனது 'என்பிஐ' (NPI) கட்டத்திற்கு, அதாவது நியூ ப்ராடெக்ட் இன்ட்ரோடக்ஷன் (New Product Introduction) கட்டத்தை எட்டியுள்ளது.

இது, குறிப்பிட்ட பிக் பேட்டரி ஸ்மார்ட்போன் ஆனது வெறும் கருத்தாக்க நிலையிலிருந்து வெகுஜன உற்பத்தி நிலையை நோக்கி நகர்வதை குறிக்கிறது.ஹானர் நிறுவனத்தின் இந்த 14,000mAh பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் சந்தைக்கு வந்தால், வழக்கமான பிளாக்ஷிப் (Flagship) போன்களை இது எளிதில் விஞ்சிவிடும். உதாரணமாக, ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மாடலில் உள்ள 4,252mAh பேட்டரியை விட இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்
பேட்டரியின் அளவு மிகப்பெரியதாக இருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன் சுமார் 220 கிராம் எடையை கொண்டிருக்கும் என்று வெளியாக லீக்ஸ் தெரிவிக்கின்றன. ஒரு ஸ்மார்ட்போனுக்கு இது சற்று அதிக எடைதான் என்றாலும், உள்ளே இருக்கும் ஹார்ட்வேர்களை கருத்தில் கொள்ளும்போது, இது கையாள்வதற்கு ஏற்ற அளவிலேயே உள்ளது.
இத்துறையில் (பேட்டரி டிபார்ட்மென்ட்டில்) ஹானர் நிறுவனத்திற்கு சிறந்த வரலாறு உள்ளது. இந்நிறுவனத்தின் வின் டர்போ (Win Turbo) மாடல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 10,000mAh திறனை கடந்தது. அதேபோல், சமீபத்தில் வெளியான எக்ஸ்80 ப்ரோ மேக்ஸ் மாடலானது 11,000mAh பேட்டரி உடன் வெளியாகி, 26 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக நேரலை (livestreaming) செய்யும் திறனை வெளிப்படுத்தியது.
இப்போது வரவிருக்கும் 14,000mAh மேம்படுத்தப்பட்ட பதிப்பு, இயல்பாகவே அந்த செயல்பாட்டு நேரத்தை இன்னும் அதிகரிக்கும். இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் எந்த சீரீஸின் கீழ் இடம்பெறும் அல்லது எப்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் ஹானரின் முந்தைய பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை கருத்தில் கொள்ளும்போது இது நிச்சயமாக வெளியாகும்.
ஹானர் பவர் 3 மாடலும் வருகிறது: இந்த ஆண்டின் தொடக்கத்தில் 10080mAh பேட்டரியுடன் அறிமுகமான ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மாடலாக ஹானர் பவர் 3 மாடலை, இந்நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. பவர் 2, ஜனவரி 2026-இல் அறிவிக்கப்பட்டதை கருத்தில் கொண்டால், பவர் 3 அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் வெளியீட்டிற்கு வெகு முன்னதாகவே, டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipter Digital Chat Station) வழியாக ஹானர் பவர் 3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் லீக் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹானர் பவர் 3 ஸ்மார்ட்போன் ஆனது நெக்ஸ்ட் ஜெனெரஷன் டியாடெக் டைமென்சிட்டி 8600 சீரிஸ் சிப்செட்டை கொண்டிருக்கக்கூடும்.
மேலும் இது பேட்டரி லைஃப் மற்றும் செயல்திறனில் அதிக கவனம் செலுத்தி, மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவை இலக்காக கொண்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. ஒரு ஆரம்பகட்ட இன்ஜினியரிங் ப்ரோட்டோடைப்பில் (engineering prototype), இது 2.5டி கிளாஸ் உடனான 6.8-இன்ச் 1.5கே LTPS பிளாட் டிஸ்பிளேவுடன் காணப்பட்டதாக மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார்
மேலும் இதன் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றாக கூறப்படும் பேட்டரி திறன் - 10000mAh-ஐ தாண்டக்கூடும் என்றும், ஹானர் நிறுவனம் 11,000mAh முதல் 12,000mAh வரையிலான பேட்டரி அளவை இலக்காக கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 12000mAh என்பது உண்மையாகும் பட்சத்தில், ஒரு பிரதான ஸ்மார்ட்போனில் இதுவரை பயன்படுத்தப்பட்டதிலேயே அதிக திறன் கொண்ட பேட்டரிகளில் இதுவும் ஒன்றாக அமையும். ஆனால் இது, மற்ற பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களை போலவே, இந்திய சந்தைக்கு வருமா என்பது தான் மிகப்பெரிய கேள்வி!


Click it and Unblock the Notifications