Home
Mobile

HMD Barbie Phone-ஐ தொடர்ந்து இன்னொரு புது Pro மாடல்.. 8GB ரேம், 5000mAh பேட்டரி, 50MP ரியர், 50MP செல்பீ!

நோக்கியா (Nokia) பிராண்டட் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனம் அதன் எச்எம்டி பார்பி போனை (HMD Barbie Phone) இந்தியாவில் அறிமுகம் செய்த வேகத்தில், இன்னொரு புதிய ஸ்மார்ட்போனையும் விரைவில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. அதென்ன மாடல்? அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது எச்எம்டி பல்ஸ் 2 ப்ரோ (HMD Pulse 2 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது கடந்த ஏப்ரல் 2024 இல், எச்எம்டி பல்ஸ் (HMD Pulse) மற்றும் எச்எம்டி பல்ஸ் பிளஸ் (HMD Pulse Plus) ஆகிய மாடல்களுடன் அறிமுகமான எச்எம்டி பல்ஸ் ப்ரோ மாடலின் அப்கிரேடட் வெர்ஷனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

HMD Barbie Phone-ஐ தொடர்ந்து இன்னொரு புது Pro மாடல்!

டிப்ஸ்டர் HMD_MEME'S (@smashx_60) வழியாக லீக் ஆன சில ரெண்டர்களின் அடிப்படையில், இந்த ஸ்மார்ட்போன் க்ரே, க்ரீன் மற்றும் பர்பிள் ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பிட்ட டிப்ஸ்டர் ஸ்மார்ட்போனின் மாடல் பெயரை வெளியிடவில்லை. ஆனால் "மீண்டும் ஒருமுறை" என்று குறிப்பிட்டுள்ளார்.

எச்எம்டி பல்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- ஆண்ட்ராய்டு 15 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்
-யுனிசாக் டி612 சிப்செட்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம்
- 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
- 5000mAh பேட்டரி
- 20W வயர்டு சார்ஜிங்கை ஆதரவு

Take a Poll

எச்எம்டி பார்பி போனின் விலை: இந்தியாவில் இது ரூ.7,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எச்எம்ட இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது. இது சிங்கிள் பவர் பிங்க் கலர் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் - ஒரு நகை பெட்டி பாணியிலான ரீடெயில் பாக்ஸில் அனுப்பப்படுகிறது. இதில் பிங்க் யுஎஸ்பி டைப்-சி கேபிள், கூடுதல் பார்பி-தீம் கொண்ட பேக் கவர்கள், ஜெம் ஸ்டிக்கர்களும் இருக்கும்.

எச்எம்டி பார்பி போனின் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது?
- 2.8-இன்ச் QVGA இன்னர் டிஸ்பிளே
- 1.77-இன்ச் QQVGA கவர் டிஸ்பிளே
- கவர் டிஸ்பிளேவானது ஒரு கண்ணாடியாகவும் செயல்படும்
- எல்இடி ஃபிளாஷ் உடன் 0.3-மெகாபிக்சல் ரியர் கேமரா
- 64MB ரேம் மற்றும் 128MB ஸ்டோரேஜ்
- மைக்ரோ எச்டி கார்டு வழியாக சேமிப்பிடத்தை 32ஜிபி வரை விரிவாக்கலாம்

- யுனிசாக் டி107 சிப்செட்
- எஸ்30+ ஓஎஸ்
- பார்பி-தீம் கொண்ட யுஐ
- 1450mAh நீக்கக்கூடிய பேட்டரி (இதுவும் பிங்க் கலரில் வருகிறது)
- 4ஜி ஆதரவு
- ப்ளூடூத் 5.0
- 3.5மிமீ ஆடியோ ஜாக்
- யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- 123.5 கிராம் எடை

சமீபத்தில் நடந்த எம்டபிள்யூசி 2025 (MWC 2025) நிகழ்வில் எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது பல புதிய மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் எச்எம்டி பார்கா 3210 (HMD Barca 3210), எச்எம்டி 2660 பிளிப் (HMD 2660 Flip), எச்எம்டி 130 மியூசிக் (HMD 130 Music) மற்றும் எச்எம்டி 150 மியூசிக் (HMD 150 Music) ஆகிய 4 பீச்சர் போன்களை அறிமுகம் செய்திருந்தது

கூடவே எச்எம்டி பியூஷன் எக்ஸ்1 (HMD Fusion X1) மற்றும் எச்எம்டி பார்கா ஃப்யூஷன் (HMD Barca Fusion) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்து இருந்தது. ஆனால் எந்த மொபைல் மற்றும் ஸ்மார்ட்போனின் விலையும் அறிவிக்கப்படவில்லை மற்றும் இவைகள் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற விவரங்களும் எதுவும் கிடைக்கவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
New HMD Smartphone Launching Soon Could be HMD Pulse 2 Pro What We can Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X