Home
Mobile

Google-ன் கும்மாங்குத்து.. சைனீஸ் போன்களுக்கு செக் வைத்த சுந்தர் பிச்சை.. ஆபர் விலையில் Pixel 8a விற்பனை!

கூகுள் (Google) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக அறிமுகமான பிக்சல் 8ஏ மாடலின் இந்திய விற்பனை இன்று (மே 14) முதல் தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (மே 14) காலை 6:30 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக தொடங்கியது. இது மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் வருகிறது: அலோ, பே, அப்சிடியன் மற்றும் பொர்சேலைன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்: 128ஜிபி அல்லது 256ஜிபி.

Google-ன் கும்மாங்குத்து.. ஆபர் விலையில் Pixel 8a விற்பனை!

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.52,999 ஆகும் மற்றும் 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.59,999 ஆகும். நினைவவோடும் வண்ணம் இது பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனை விட மிகவும் அதிகமான விலை நிர்ணயம் ஆகும். பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ​ரூ.43,999 ஆக இருந்தது; ஒப்பீட்டளவில் பிக்சல் 8ஏ மாடலின் விலை ரூ.9000 அதிகமாக உள்ளது.

ஆனால் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனை நீங்கள் ப்ரீ-ஆர்டர் செய்து இருந்தால், சில பேங்க் கார்டுகளின் கீழ் சில நல்ல சலுகைகள் அணுக கிடைக்கும். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு உடனடி தள்ளுபடி ஆக ரூ 4,000 கிடைக்கும். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ.9,000 வரையிலான தள்ளுபடியையும் பெற முடியும்.

Google-ன் கும்மாங்குத்து.. ஆபர் விலையில் Pixel 8a விற்பனை!

மேற்கண்ட பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் ஆகிய இரண்டையுமே மிகச்சரியாக பயன்படுத்தினால் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் இறுதி விலையை ரூ.39,999 ஆக குறைக்க முடியும். அதாவது ரூ.52,999 க்கு அறிமுகமான இந்த லேட்டஸ்ட் பிக்சல் மாடலை ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க முடியும். மேலும், நீங்கள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டர் செய்து இருந்தால் பிக்சல் பட்ஸ் ஏ-சீரிஸை (Pixel Buds A-Series) வெறும் ரூ.999 க்கு வாங்கலாம்.

கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 1080 x 2400 ரெசல்யூஷன், 430 பிபிஐ, 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பழைய பிக்சல் 7ஏ உடன் ஒப்பிடும் போது பிக்சல் 8ஏ மாடலின் டிஸ்பிளே 40% பிரகாசமாக இருக்கும் என்று கூகுள் கூறுகிறது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது கூகுளின் டென்சர் ஜி3 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி LPDDR5x ரேம் உள்ளது. கேமராவை பொறுத்தவரை இதில் 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸ் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

இந்த கேமரா செட்டப்பில் சில ஏஐ அம்சங்களும் (AI Features) உள்ளன. அதில் பெஸ்ட் டேக் (Best Take), மேஜிக் எடிட்டர் (Magic Editor), ஆடியோ மேஜிக் ஏரேசர் (Audio Magic Eraser) போன்றவைகள் அடங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுளின் பில்ட் இன் ஏஐ அசிஸ்டென்ட் ஆன ஜெமினியும் (Built-in AI Asistant Gemini) இணைக்கப்பட்டுள்ளது.

அறியதோர்களுக்கு ஜெமினி ஏஐ (Gemini AI) ஆனது ஒரு கூகுள் அசிஸ்டென்ட் (Google Asistant) போல செயல்படும். அதாவது இது பயனர்களுக்காக பல்வேறு பணிகளை செய்யும். கடைசியாக பேட்டரியைப் பொறுத்தவரை பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது 4492mAh பேட்டரியுடன் வருகிறது, கூகுளின் கூற்றுப்படி, இது ஒரு நாள் முழுவதும் நீடிக்கும். ரீடெயில் பாக்ஸில் ஒரு சார்ஜர் இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Google Pixel 8a Smartphone First India Sale Started Check Price Offers Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X