அங்க வச்சேன் பாரு டிவிஸ்டு.. Nothing Phone 3 ஸ்மார்ட்போனில் கன்ஃபார்ம் செய்யப்பட்ட முக்கிய அம்சம்!
ஜூலை 1 ஆம் தேதி அன்று நத்திங் நிறுவனத்தின் "முதல் மற்றும் உண்மையான" பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீடு மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலைப்பாட்டில், கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம் போன் 3 மாடலை பற்றிய புதிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் சாஃப்ட்வேர் அப்டேட் கொள்கையை உறுதிப்படுத்திய பிறகு, நத்திங் நிறுவனம் ஒரு புதிய டீஸர் வீடியோவை வெளியிட்டுள்ளது, இது நத்திங் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றான கிளிஃப் இன்டர்பேஸ்-ஐ "மாற்றும்" அம்சத்தை காட்டுகிறது.

வரவிருக்கும் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஆசஸ் ஆர்ஓஜி சீரீஸ் போன்களை போன்ற ரியர் பேனலில் ஒரு புதிய எல்இடி எலிமெண்ட் இருக்கும்.நத்திங் நிறுவனம் இதை "கிளிஃப் மேட்ரிக்ஸ்" இன்டர்பேஸ் என்று அழைக்கிறது. இது முந்தைய நத்திங் ஃபோன் 2 மற்றும் ஃபோன் 1 மாடல்களிலிருந்து வேறுபடும் என்பதையும் வெளிப்படுத்திஉள்ளது
கிளிஃப் எல்இடி இன்டர்பேஸ்-க்கு பதிலாக, நத்திங் போன் 3 மாடலின் பேக் பேனலின் மேல் வலது மூலையில் டாட்-மேட்ரிக்ஸ் பேனல் அமைந்துள்ளது போல் தெரிகிறது. இந்த கிளிஃப் மேட்ரிக்ஸ் ஆனது அனிமேஷன்கள், கால் நோட்டிஃபிகேஷன்கள், பேட்டரி ஸ்டேட்டஸ், நேரம் மற்றும் பிற ரீமைண்டர்களை காண்பிக்க வாய்ப்புள்ளது.
ஆசஸ் நிறுவனத்தின் கேமிங் அடிப்படையிலான ஆர்ஓஜி போன்கள் ஆனது அனிமேஷன்கள் மற்றும் இன்டராக்சன்களுக்காக மினி-எல்இடிகளுடன் கூடிய டாட் மேட்ரிக்ஸ் செட்டப்பை பேக் பேனலில் கொண்டுள்ளது. இதையே நத்திங் நிறுவனமும் பின்பற்றலாம். இதுதவிர்த்து நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பற்றிய கூடுதல் விவரங்கள் இப்போதைக்கு தெரியவில்லை,. ஜூலை 1 நடக்கும் வெளியீட்டிற்கு முன்னதாக கூடுதல் டீஸர்களை வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
முன்னதாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்ன சிப்செட் இடம்பெறும் என்பதை நத்திங் நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவித்து இருந்தது. எக்ஸ் போஸ்ட் ஒன்றின் வழியாக, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் ( Qualcomm Snapdragon 8s Gen 4 chipset) கொண்டு இயங்கும் என்பதை நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.
இது ஹை-எண்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் ஆக இல்லையென்றாலும், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை விட இது தீவிரமான செயல்திறன் ஆதாயங்களை கொண்டுள்ளது. இந்த புதிய சிப் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டிற்கு இணையான செயல்திறனை வழங்குகிறது.
அதனை தொடர்ந்து நத்திங்கின் இணை நிறுவனரான அகிஸ் எவாஞ்சலிடிஸ், நத்திங் நிறுவனம் ஏன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டிற்கு பதிலாக ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை பயன்படுத்த முடிவு செய்தது என்பது குறித்த கேள்விக்கு எக்ஸ் பயனர் ஒருவருக்கு பதிலளித்து இருந்தார்.
அவரது விளக்கம் - ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 எவ்வாறு சிறந்த ஜிபியு, என்பியு, ஐபிஎஸ், கனெக்டிவிட்டி மற்றும் டீபால்ட் சாஃப்ட்வேர் அப்டேட்டை கொண்டுள்ளது என்பது பற்றி இருந்தது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ஆனது 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 4 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் கொண்டு வரும் அதே வேளையில், ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 ஆனது 5 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 7 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் வழங்கும்.
ஆக ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் உடன் வரும் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 5 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 7 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் வழங்கலாம் என்பதை அவர் சூசகமாக கூறியுள்ளார்.
பொதுவாக ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் 2 முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களையும், 3 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் பெறுகிறது. ஆனால் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் பொதுவாக குறைந்தது 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், நீண்ட செக்யூரிட்டி பேட்ச்களையும் பெறுகின்றன. நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனானது 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் வந்தது. இருப்பினும் நத்திங் போன் 3 அப்படி இருக்கப்போவதில்லை!


Click it and Unblock the Notifications








