ஐபோன் 8 அச்சுறுத்தல் : புதிய கேலக்ஸி எஸ்8, எல்ஜி ஜி6 மாறுபாடுகள்.!

|

சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் ஐபோன் 8 வருகை மூலம் அச்சுறுத்தலாக உணர்வது போல தெரிகிறது. ஐபோன் 8 அறிமுகமே ஆகிடாத நிலைப்பாட்டில் அச்சறுத்தல் காரணமாக கேலக்ஸி எஸ்8 மற்றும் எல்ஜி Gஜி6 ஆகிய கருவிபாலின் புதிய வகைகளை வெளியிடும் பணிகளைத் திட்டமிட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன் 8 அச்சுறுத்தல் : புதிய கேலக்ஸி எஸ்8, எல்ஜி ஜி6 மாறுபாடுகள்.!

ஐபோன் 8 கருவியின் வருகை காரணமாக வரும் மாதங்களில் சாம்சங், எல்ஜி ஆகியவை வரும் மாதங்களில் நிறுவனத்தின் விசேஷ மாதிரிகளை வெளியீடு செய்ய திட்டமிடுகின்றன என்று ஆண்ட்ராய்டுநியூஸ் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றன. ஆப்பிள் இந்த ஆண்டுநிறுவனத்தின் பத்தாவது ஐபோன் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

இதனை முன்னிட்டு ஐபோன் எக்ஸ் என்று அழைக்கப்படும் அதன் அல்டரா-பிரீமியம் ஐபோன் (ஐபோன் 8) பதிப்பை வெளியிடுகிறது. இதன் விளைவாக, ஆண்ட்ராய்ட்நியூஸ் தகவலின்படி சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியின் குறைந்தபட்ச விலை நிர்ணயம் கொண்ட ஒரு புதிய வண்ண மாறுபாட்டைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது அது ரோஸ் தங்கம் என்றும் கூறியுள்ளது. அதற்கு முன்பு வெளியான ரோஸ் கோல்ட் மாறுபாடு ஆனது கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் சாதனத்திற்க்கானது என்றும் அதன் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. சாம்சங் நிறுவனத்தின் இந்த இரண்டு புதிய மாறுபாடுகளும் சிறியதாக இருக்கும் என்றும் வெளியான தகவல்கள் விளக்குகிறது.

அதுமட்டுமின்றி சாம்சங் அதன் புதுப்பிக்கப்பட்ட கேலக்ஸி நோட் 7 கருவியையும் வெளியிடுவதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 8 சாதனத்தை எதிர்கொள்ளும் திட்டம் கொண்டுள்ளது என்றும் தகவ்கல்கள் வெளியாகியுள்ளது.

மறுபக்கம் எல்ஜி நிறுவனம் அதன் ஜி6 கருவியின் இரண்டு புதிய மாதிரிகளை ஐபோன் 8-க்கு போட்டியாக களமிறக்க திட்டமிட்டுள்ளது. அவை எல்ஜி ஜி 6 பிளஸ் மற்றும் ஜி 6 புரோ என அழைக்கப்படுகின்றன. பிளஸ் மாறுபாட்டை "அசல் பிரீமியம் மாறுபாடு" என விவரிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ப்ரோ "சற்று குறைக்கப்பட்ட பதிப்பு" எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இரண்டு வகைகளும் வேறுபட்டதாக இருக்க வேண்டும், நினைவகம் மற்றும் அவர்கள் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு ஆகிய விடயங்களில் மாற்றங்கள் கொண்டிருக்கலாம். இந்த இரண்டு எல்ஜி ஜி6 வகைகளும் இந்த மாத இறுதிக்குள் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் நிறுவனம் எல்ஜி ஜி6 கருவியின் ஒரு "மினி" பதிப்பையும் திட்டமிட்டுள்ளது என்று கடந்த மாதம் லீக்ஸ் தகவல் வெளியானது என்பதும் இப்போது வெளியான தகவலோடு விட சற்று வித்தியாசமாக தெரிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Special Samsung Galaxy S8, LG G6 variants planned.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X