பேய் மாதிரி வேலை செஞ்சிருக்கும் Samsung: இதோ Galaxy Z Fold 4-இன் Quick Review!

|

ரூ.10,000 க்கு ஸ்மார்ட்போன் வாங்கினாலும் கூட 1008 கேள்விகளை கேட்கும் இந்தியர்களுக்கு மத்தியில் ரூ.1,40,600-க்கு ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதென்றால் சும்மா இல்லை. அதில் எல்லாமே 'பக்கா'வாக இருக்க வேண்டும். ஒரு சின்ன குறை இருந்தாலும் கூட - சோலி முடிந்தது!

நாம் இங்கே பேசுவது, சமீபத்தில் அறிமுகமான Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனை பற்றித்தான்! இது கொடுக்கும் காசுக்கு ஏற்ற அம்சங்களை பேக் செய்கிறதா என்பதை பற்றி, வெறும் 7 புள்ளிகளில் ஒரு Quick Review ஆக பார்த்து விடலாம் வாருங்கள்!

01. டிசைன் வாரியாக, Galaxy Z Fold 4 எப்படி இருக்கு?

01. டிசைன் வாரியாக, Galaxy Z Fold 4 எப்படி இருக்கு?

இரண்டே வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் - சிறந்தது மற்றும் இலகுவானது! டிசைனை பொறுத்தவரை, Samsung Galaxy Z Fold 4 ஆனது குறிப்பிடத்தக்க மேம்பாடுகளுடன் வருகிறது.

Fold 4 ஆனது அதன் முன்னோடியான Fold 3 மாடலை விட அதிக பிரீமியமாகவும், 8 கிராம் எடை குறைவாகவும் உள்ளது. இதை கைகளிலும், பாக்கெட்களிலும் மிகவும் லேசாகவே உணர முடிகிறது!

சுற்றி வளைக்காத 'ஓப்பன்' Review! Redmi K50i 5G போனை வாங்கலாமா?சுற்றி வளைக்காத 'ஓப்பன்' Review! Redmi K50i 5G போனை வாங்கலாமா?

02. அல்டிமேட் ஆன அவுட்டர் டிஸ்பிளே டிசைன்!

02. அல்டிமேட் ஆன அவுட்டர் டிஸ்பிளே டிசைன்!

Galaxy Z Fold 4 ஆனது கிட்டத்தட்ட Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போனை போலவே இருந்தாலும் கூட, சாம்சங் நிறுவனம் இதன் அவுட்டர் டிஸ்பிளேவை சற்று அகலமாக்கியுள்ளது.

இது மிகவும் பயன்படுத்தக்கூடியதாகவும், நடைமுறைக்குரியதாகவும் உள்ளது. ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போனின் அவுட்டர் டிஸ்பிளேவானது அளவில் 6.2-இன்ச் உள்ளது. மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வரும் ஒரு டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவும் ஆகும்.

03. இருப்பதிலேயே பெரிய அப்டேட்.. Fold 4-இன் ப்ரைமரி டிஸ்பிளேவில்!

03. இருப்பதிலேயே பெரிய அப்டேட்.. Fold 4-இன் ப்ரைமரி டிஸ்பிளேவில்!

ஏனெனில் Galaxy Z Fold 4 ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வரும் 7.6-இன்ச் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த டிஸ்பிளே அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கிறது. அதாவது 1Hz மற்றும் 120Hz க்கு இடையே ரெஃப்ரெஷ் ஆகும்.

எல்லாவற்றை விட முக்கியமாக இந்த டிஸ்ப்ளே வலுவான அல்ட்ரா-தின் கிளாஸ் உடனாக கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்புடன் வருகிறது. மேலும் இது S Pen இன்புட்டையும் ஆதரிக்கிறது.

Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!

04. பிளாக்ஷிப் போனுக்கு ஏற்ற பிளாக்ஷிப் ப்ராசஸர்!

04. பிளாக்ஷிப் போனுக்கு ஏற்ற பிளாக்ஷிப் ப்ராசஸர்!

Samsung Galaxy Z Fold 4 ஆனது Snapdragon 8+ Gen 1 மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் சிறந்த கிராபிக்ஸ் மற்றும் கேமிங் செயல்திறனுக்காக மேம்படுத்தப்பட்ட Adreno GPU உடன் வருகிறது. ஒட்டுமொத்த செயல்திறன் - மிகவும் ஸ்மூத் ஆகவும், ரெஸ்பென்சிவ் ஆகவும் உள்ளது!

05. இதை விட பெஸ்ட் கேமராக்கள் வேறு எந்த ஃபோல்டபிள் போனிலும் இல்லை!

05. இதை விட பெஸ்ட் கேமராக்கள் வேறு எந்த ஃபோல்டபிள் போனிலும் இல்லை!

ஏனெனில் Fold 3 ஸ்மார்ட்போனின் 12MP மெயின் கேமராவானது, Fold 4-இல் 50MP ஆக அப்டேட் ஆகி உள்ளது. உடன் 12MP அல்ட்ரா-வைட் சென்சார் + 3X ஆப்டிகல் ஜூம் மற்றும் 30X ஸ்பேஸ் ஜூம் ஆதரவுடன் கூடிய 10MP டெலிஃபோட்டோ சென்சாரும் உள்ளது.

ஒப்பிடுகையில், கேமரா தரம், வேகம், துல்லியம், வண்ணம் என எல்லாமே அல்டிமேட் ஆக உள்ளது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேக நைட் மோட் அல்லது நைட்கிராஃபி உடனும் வருகிறது. முன்பக்கத்தில் 10MP செல்பீ கேமரா "போதுமான" வேலையை செய்கிறது.

இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!

06. வேற லெவல் மல்டி-டாஸ்க்கிங்!

06. வேற லெவல் மல்டி-டாஸ்க்கிங்!

Galaxy Z Fold 4 வழியாக சாம்சங் நிறுவனம், யூசர்களின் மல்டி-டாஸ்க்கிங் அனுபவத்தை நன்றாக மேம்படுத்த முயற்சித்துள்ளது என்றே கூறலாம்.

இது PC-like Taskbar உடன் வருகிறது, இது ஆப்களுக்கு இடையில் விரைவாக மாற அனுமதிக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆப்களை திறப்பதற்கான மல்டி-விண்டோ கெஸ்டர்களுடனும் வருகிறது.

07. நல்ல யூசர் இன்டர்பேஸை வழங்கும் Android 12L அடிப்படையிலான OneUI 4.1.1 ஓஎஸ்!

07. நல்ல யூசர் இன்டர்பேஸை வழங்கும் Android 12L அடிப்படையிலான OneUI 4.1.1 ஓஎஸ்!

Galaxy Z Fold 4 ஆனது பெரிய டிஸ்பிளேக்களுக்கு உகந்த ஆண்ட்ராய்டு 12L ஓஎஸ் மூலம் இயங்குகிறது. மேலும் இந்த சாம்சங் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் சொந்த OneUI 4.1.1 கஸ்டம் யூசர் இன்டர்பேஸ் உடன் வருகிறது, இது முன்பை விட மிகவும் ஆப்டிமைஸ்டு ஆக உள்ளது என்றே கூறலாம்.

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!

Samsung Galaxy Z Fold 4 பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோம்?

Samsung Galaxy Z Fold 4 பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோம்?

Galaxy Z Fold 4-ஐ ஒரு 'பெர்ஃபெக்ட்' ஆன ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் என்று கூறுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. வேகமான செயல்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா ஆகிய இரண்டும் இதை இன்னும் 'பெஸ்ட்' ஆக மாற்றுகிறது.

ஒட்டுமொத்தமாக, Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போன் ஆனது நல்ல மேம்பாடுகளுடன் வரும் ஒரு பாலிஷ்டு ஆன.. ரீடிஃபைன்டு ஆன ஸ்மார்ட்போன் ஆகும்!

Best Mobiles in India

English summary
New Foldable Smartphone 2022 Samsung Galaxy Z Fold 4 Quick Review

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X