CMF சரண் அடைந்தது.. பட்ஜெட் விலைக்கு இறங்கிய Pro மாடல்.. 5ஜி, 16GB ரேம், 50MP EIS கேமரா, 5000mAh பேட்டரி!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் நடக்கும் பிக் வின்டர் போனான்சா (Big Winter Bonanza) என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன சிஎம்எப் (CMF) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அது சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போன் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது இந்த வேரியண்ட்களின் மீதும் ரூ.1000 நேரடி விலை குறைப்பு கிடைக்கிறது. இதன் கீழ் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனை ரூ.18,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கும் பிளிப்கார்ட் வழியாக வாங்க முடியும்.
கூடுதலாக வங்கி சலுகைகளும் கிடைக்கிறது. அதன் மூலம் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறைக்க முடியும். ஆர்முள்ளவர்கள் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனை பிளாக், லைட் க்ரீன், ஆரஞ்சு மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம். இது யுனிவர்சல் கவர், இன்டர்சேஞ்சபிள் லென்ஸ்கள், வாலட், ஸ்டாண்ட், லேன்யார்டு அல்லது கார்டு ஹோல்டர் (தனித்தனியாக விற்கப்படுகிறது) போன்ற பல்வேறு ஆக்சஸெரீஸ்களுடன் வருகிறதுஎன்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ+நானோ)
- 6.77 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2160Hz PWM ப்ரெக்வன்சி
- 387ppi பிக்சல் டென்சிட்டி
- 480Hz டச் சாம்ப்ளிங் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- HDR10+ ஆதரவு
- பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்
- 8ஜிபி வரை ரேம்
- ரேம் பூஸ்டர் அம்சத்தின் கீழ் ரேம்-ஐ 16ஜிபி வரை விரிவாக்க முடியும்.
- 2டிபி வரை மெமரி விரிவாக்கத்தை ஆதரிக்கும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்
- இரண்டு மைக்ரோஃபோன்கள்
- ஒரு எசன்ஷியல் பட்டன் (இது ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் போன்ற டேட்டாவை அணுக உதவும் புதிய எசன்ஷியல் ஸ்பேஸ்-ஐ விரைவாக அணுக அனுமதிக்கிறது)
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.88 மற்றும் EIS உடன் 50 மெகாபிக்சல் 1/1.57-இன்ச் சென்சார்
- எப்f/1.88 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 119.5-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- டெலிஃபோட்டோ கேமராவில் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 20x டிஜிட்டல் ஜூமிங் திறன் உள்ளது
- எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- மேம்படுத்தப்பட்ட கேமரா அவுட்புட்டிற்காக நத்திங் ட்ரூலென்ஸ் எஞ்சின் 3.0 (Nothing's TrueLens Engine 3.0) தொழில்நுட்பம்
- 33W பாஸ்ட் சார்ஜிங்
- 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
- 5000mAh பேட்டரி
- சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 47 மணிநேர அழைப்பு நேரத்தையும், 22 மணிநேரம் வரை யூட்யூப் ஸ்ட்ரீமிங் நேரத்தையும் வழங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
- ரீடெயில் பாக்ஸ்-ல் சார்ஜிங் அடாப்டர் மற்றும் ஒரு கேஸ்
- 5ஜி ஆதரவு
- வைஃபை 6
- ப்ளூடூத் 5.3
- யுஎஸ்பி டைப் சி போர்ட்
- - ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 164×7.8×78மிமீ
- எடையில் 185 கிராம்


Click it and Unblock the Notifications








