இப்போ ரூ.4000 கம்மி ஆகி.. சர்ர்னு சூப்பர்-பட்ஜெட் விலைக்கு இறங்கிய பிரபல Motorola போன்.. என்ன மாடல்?
மலிவான விலையில் ஒரு தரமான ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், பிரபலமான மோட்டோரோலா (Motorola) ஸ்மார்ட்போனின் மீது பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த ஆஃபர் உங்களுக்கானது தான். அதென்ன மாடல்? அதன் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது மோட்டோ ஜி13 (Moto G13) ஸ்மார்ட்போனின் மீது 28% நேரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதாவது, தற்போது மோட்டோரோலா ஜி32 மீது முழுதாக ரூ.4000 என்கிற தள்ளுபடி கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.13999 ஆகும்.

ஆனால் தற்போது இது வெறும் ரூ.9,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேரடி தள்ளுபடி மட்டுமின்றி மோட்டோ ஜி32 மீது வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியும் கூட கிடைக்கிறது. வங்கி சலுகைகளை பொறுத்தவரை, பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் (Flipkart Axis Bank) கார்டுகளை பயன்படுத்தினால் 5% கேஷ்பேக்கை பெறலாம்.
எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை (Exchange Offer) பொறுத்தவரை, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் உங்களால் ரூ.8850 வரையிலான எக்ஸ்சேன்ஜ் வேல்யூவை பெற முடியும். இருப்பினும், இறுதி தள்ளுபடி விலையானது நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் நிலைமையை பொறுத்து வேறுபடும்.
அம்சங்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி 3 ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) ஆதரவு உடைந்தன பெரிய 6.5 இன்ச் ஐபிஓஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உடனே வருகிறது.
மோட்டோரோலா நிறுவனம் இந்த கேமரா செட்டப்பை, 50எம்பி குவாட் பிக்சல் கேமரா செட்டப் (50MP Quad Pixel Camea Setup) என்று அழைக்கிறது. அதில் 50எம்பி மெயின் கேமரா மற்றும் இரண்டு 2எம்பி மேக்ரோ மற்றும் ஒரு டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 8எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செய் உடன் இணைந்து 4ஜிபி வரையிலன ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படுகிறது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் லேட்டஸ்ட் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 13-ஐ (Stock Android 13) கொண்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் கூற்றுப்படி, ஸ்டாக் ஆண்ட்ராய்டு 13 ஆனது சிறந்த மென்பொருள் அனுபவத்தை வழங்கும். மேலும் மோட்டோரோலா நிறுவனமானது இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14-க்கும் (Android 14) மேம்படுத்தப்படும், கூடவே மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் (Security Update) பெறும் என்றும் உறுதியளித்துள்ளது.
மோட்டோ ஜி13 ஆனது 5,000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. மேலும் இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி52 ரேடிங்கையும் (IP52 Rating) பெற்றுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மூலம் டியூன் செய்யப்பட்ட இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன.


Click it and Unblock the Notifications








