Home
Mobile

அடேய்.. ரூ.15,000 Samsung போனை இவ்ளோ கம்மி விலைக்கா விக்குறது.. மிரள வைக்கும் Flipkart Sale ஆஃபர்!

ஜூன் 14 ஆம் தேதி வரை நடக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ள பிளிப்கார்ட்டின் புதிய பிக் சேவிங் டேஸ் விற்பனையின் (Flipkart Big Saving Days Sale) போது, ரூ.15,000 க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போனானது நம்பமுடியாத கம்மி விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதென்ன மாடல்? நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எஃப்13 (Samsung Galaxy F13) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இது பிளிப்கார்ட் வழியாக மாபெரும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த போனின் பழைய விலை என்ன? புதிய சலுகை விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

அடேய்.. ரூ.15,000 Samsung போனை இவ்ளோ கம்மி விலைக்கா விக்குறது!

1 வருடத்திற்கு முன் அறிமுகமான போன் தான்.. ஆனாலும்! நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஃப்13, கடந்த ஜூன் 2022-ல் அறிமுகப்படுத்தப்பட்டது, இதுவொரு மிட்-ரேன்ஜ் போனாக இருந்தாலும் கூட பல சுவாரஸ்யமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் 1 வருடத்திற்கு முன் அறிமுகமான போனாக இருந்தாலும் கூட இன்றும் நம்பி வாங்க கூடிய மாடலாக திகழ்கிறது.

ஏன் இதை நம்பி வாங்கலாம்? ஏனென்றால் இது துடிப்பான மற்றும் விரிவான காட்சிகளை வழங்குவதற்காக 1080x2408 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் மிகவும் திறமையான ஆக்டா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 850 ப்ராசஸர் (Octa-core Samsung Exynos 850 processor) மூலம் இயக்கப்படுகிறது.

இதன் ப்ராசஸர் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அன்றாட பயன்பாட்டின் போது மென்மையான செயல்திறனை உறுதி செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஹை ரெசல்யூஷனை கொண்ட 50எம்பி மெயின் சென்சார் உள்ளது.

அதனுடன் பரந்த காட்சிகளை படம்பிடிப்பதற்கான 5எம்பி அல்ட்ரா-வைட் சென்சார், போர்ட்ரெய்ட் புகைப்படங்களுக்கான டெப்த்-ஐ உறுதிசெய்யும் 2எம்பி டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன. கடைசியாக இது ஒரு பெரிய 6000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமின்றி நீண்ட கால பயன்பாட்டை வழங்குகிறது.

பழைய விலையும், சலுகை விலையும்! முன்னதாக ரூ.14,999 க்கு வாங்க கிடைத்த சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போனின் 64ஜிபி வேரியண்ட் ஆனது - பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது - வெறும் ரூ.9699 க்கு வாங்க கிடைக்கிறது, அதாவது இது 35 சதவீதம் என்கிற மிகப்பெரிய தள்ளுபடியை பெற்றுள்ளது.

தள்ளுபடி தவிர்த்து வேறு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? 35% தள்ளுபடி தவிர்த்து சாம்சன் கேலக்ஸி எஃப்13 மீது எக்ஸ்சேன்ஜ் மற்றும் சில வங்கி சலுகைகளும் கிடைக்கின்றன. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ.9150 வரையிலான எக்ஸ்சேன்ஜ் வேல்யூவை பெறலாம்.

நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்யும் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் தற்போதைய நிலையை பொறுத்து உங்களுக்கான எக்ஸ்சேன்ஜ் வேல்யூ மாறும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் எக்ஸ்சேன்ஜ் சலுகை உங்கள் பகுதியில் உள்ளதா என்பதை சரிபார்க்க, பிளிப்கார்ட் தளத்தில் உங்கள் பின் கோட்-ஐ உள்ளிட்டு உறுதிசெய்யவும்.

வங்கி சலுகைகளை பொறுத்தவரை, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும். டுதலாக, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டு பரிவர்த்தனைகளுக்கு 5% தள்ளுபடி கிடைக்கும். மேற்கண்ட எல்லா சலுகைகளும் சாம்சங் கேலக்ஸி எஃ13 ஸ்மார்ட்போனின் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Flipkart Big Saving Days Sale Samsung Galaxy F13 gets 35 Percent Discount and Other Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X