அல்டிமேட் Vivo 5G போன் விரைவில் அறிமுகம்: விலையை சொன்னால் கட்டாயம் வாங்குவீங்க.!
விவோ நிறுவனம் தொடர்ந்து தனித்துவமான 5ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

விவோ வி25 ப்ரோ
இந்நிலையில் புதிய விவோ வி25 ப்ரோ(Vivo V25 Pro) எனும் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது
விவோ நிறுவனம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் micro-blogging page மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன்
ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப்
பார்ப்போம்.

கண்ணை மூடிக்கொண்டு இந்த போனை வாங்கலாம்
விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 1300 SoC சிப்செட் வசதியை கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம்.
அதாவது இந்த சிப்செட்-இன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். பின்பு Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3D curved AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் வளைந்த டிஸ்பிளேவைக் கொண்டுள்ளதால் ஒரு நல்ல திரை அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.
குறிப்பாக இந்த புதிய போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்புஅம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் இதன் வடிவமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
விரைவில் வெளிவரும் புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பரான கேமரா வசதி
ஒரு நல்ல கேமரா ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது. அதாவது இந்தபோன் 64எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி portrait லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராஅமைப்பை கொண்டுள்ளது.
எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பிகேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.

நீங்கள் எதிர்பார்த்த பேட்டரி வசதி
புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4830 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 66W பிளாஷ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே விரைவில் இதை சார்ஜ் செய்ய முடியும். அதேபோல் பயனர்களுக்கு சிறந்த பேட்டரி பேக்கப் கிடைக்கும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.1, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன்.மேலும் இந்த புதிய போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன விலை?
புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று ஏற்கனவே தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் நீல நிறத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
இணையத்தில் கசிந்த தகவலின்படி ஆகஸ்ட் 3-வது வாரத்தில் விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி சேவைவிரைவில் அறிமுகமாகும்என்பதால் இந்தவி25 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications