Home
Mobile

அசத்தலான Vivo Y35 4G போன் அறிமுகம்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

விவோ நிறுவனம் இந்தோனேசியாவில் புதிய விவோ Y35 4G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

விவோ Y35 4G

விவோ Y35 4G

மேலும் புதிய விவோ Y35 4G ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y35 4ஜி

விவோ Y35 4ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்ட விவோ Y35 4ஜி போனின் விலை IDR 33,99,000 (இந்திய மதிப்பில் ரூ.18,500) ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் வெளிவந்துள்ளது.

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

புதிய விவோ Y35 4ஜி ஸ்மார்ட்போன் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும்1080 × 2408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

இந்த புதிய விவோ போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த குவால்காம் 6என்எம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த
ஸ்மார்ட்போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன்.

 மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

விவோ Y35 4ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன்வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுஉள்ளது.

  50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

விவோ Y35 4ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் +2எம்பி bokeh சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ Y35 4ஜி ஸ்மார்ட்போன்.

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

புதிய விவோ Y35 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் நீங்கள் நீண்ட நேரம் கேம் விளையாடமுடியும். பின்பு 44 வாட்ஸ் பிளாஷ்சார்ஜ் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான
விவோ ஸ்மார்ட்போன்.

 கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

டூயல் சிம், 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பெய்டூ, க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பலகனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y35 4ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 188 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Flagship Phones Vivo Y35 4G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X