Vivo X Fold+ ஸ்மார்ட்போன் அறிமுகம்: வேறலெவல் அம்சங்கள்.! வியக்கவைக்கும் விலை?

|

விவோ நிறுவனம் Vivo X Fold+ எனும் ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எக்ஸ் போல்ட் பிளஸ்

அதேபோல் இப்போது விவோ எக்ஸ் போல்ட் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைக்காது! OnePlus TVகள் மீது இதை விட கிடைக்காது! OnePlus TVகள் மீது இதை விட "வெறித்தனமான" ஆபர் இனி கிடைக்காது!

 அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

Vivo X Fold+ ஸ்மார்ட்போன் 8.03-இன்ச் AMOLED பிரைமரி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிரைமரி டிஸ்பிளே 2கே ஆதரவு, 1,916x2,160 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

அதேபோல் இந்த போனில் 6.53-இன்ச் AMOLED கவர் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இது 1,080x2,520 பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி பிளஸ் ஆதரவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விவோ போனில் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் வசதி இருப்பதால் சிறந்த கேமிங் அனுபவத்தைப் பெறமுடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆன்லைன் மூலம் புது பாஸ்போர்ட் வாங்குவது எப்படி? Passport வாங்க சுலபமான வழி இது தான்.!ஆன்லைன் மூலம் புது பாஸ்போர்ட் வாங்குவது எப்படி? Passport வாங்க சுலபமான வழி இது தான்.!

சூப்பரான  சிப்செட்

சூப்பரான சிப்செட்

Vivo X Fold+ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் உடன் Adreno 730 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறனை வழங்கும் இந்த விவோ ஸ்மார்ட்போன்.

OriginOS Ocean சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ மாடல். எனவே இந்த
ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

கம்மி விலையில் எக்கச்சக்க நன்மைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள்: Jio பயனர்களே மிஸ் பண்ணாதீங்க.!கம்மி விலையில் எக்கச்சக்க நன்மைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள்: Jio பயனர்களே மிஸ் பண்ணாதீங்க.!

512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த Vivo X Fold+ ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: கேப் விடாமல் அடிக்கும் Oppo.. லெதர் பேனல் உடன் A17!அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: கேப் விடாமல் அடிக்கும் Oppo.. லெதர் பேனல் உடன் A17!

தரமான கேமரா வசதி

தரமான கேமரா வசதி

புதிய Vivo X Fold+ ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 8எம்பி periscope கேமரா என்கிற குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றெ 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான விவோ போன்.

ரூ.74,999 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.29,999.. Amazon இல் அதிகம் விற்பனையாகும் மொபைல் பட்டியல்!ரூ.74,999 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.29,999.. Amazon இல் அதிகம் விற்பனையாகும் மொபைல் பட்டியல்!

 4730 எம்ஏஎச் பேட்டரி

4730 எம்ஏஎச் பேட்டரி

புதிய Vivo X Fold+ ஸ்மார்ட்போனில் 4730 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது இந்த விவோ போல்ட் ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.2,என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Vivo X Fold+ ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் எடை 311 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா இவ்வளவு கம்மி விலையா? Motorola அறிமுகம் செய்த 4கே ஸ்மார்ட் டிவிகள்.!அடேங்கப்பா இவ்வளவு கம்மி விலையா? Motorola அறிமுகம் செய்த 4கே ஸ்மார்ட் டிவிகள்.!

 என்ன விலை?

என்ன விலை?

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo X Fold+ போனின் விலை CNY 9,999 (இந்திய மதிப்பில் ரூ.1,15,000)
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo X Fold+ போனின் விலை CNY 10,999 (இந்திய மதிப்பில் ரூ.1,25,000)

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

photo credit: vivo

Best Mobiles in India

English summary
New Flagship Phones 2022 Vivo X Fold+ With Snapdragon 8+ Gen Launched: Specs, Price and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X