Just In
- 2 hrs ago
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- 2 hrs ago
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- 2 hrs ago
ஆப்பிள் வாட்ச் தோற்றத்தில் அறிமுகமான Ptron ஸ்மார்ட்வாட்ச்: கம்மி விலை.!
- 3 hrs ago
அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!
Don't Miss
- News
சென்சார் பூட்டு உடைப்பு..தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை..திருவெறும்பூரில் பகீர் சம்பவம்
- Lifestyle
உங்க பர்ப்யூம்கள் நீண்ட நேரம் உங்களை வாசனையாக உணர வைக்க இத பண்ணுங்க போதும்...!
- Finance
பட்ஜெட்-க்கு முன் வரும் பொருளாதார ஆய்வறிக்கை.. இது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா..?
- Movies
பரிதாபங்கள் கோபி -சுதாகர் இணையும் புதிய படம்.. பூஜையுடன் இன்று துவக்கம்!
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
சத்தமின்றி ஆசஸ் ROG Phone 6D, 6D அல்டிமேட் போன்கள் அறிமுகம்.! தலைசுற்ற வைக்கும் விலை.!
ஆசஸ் நிறுவனம் புதிய ASUS ROG Phone 6D மற்றும் ASUS ROG Phone 6D Ultimate போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன்கள் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலை வெளிவந்துள்ளன.

கேமிங் சிப்செட்
அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஆசஸ் ஸ்மார்ட்போன்கள் சிறந்த கேமிங் சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளன. சரி முதலில் இப்போது இந்த இரண்டு போன்களின் முக்கிய அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சூப்பரான டிஸ்பிளே அம்சங்கள்
ஆசஸ் ROG Phone 6D மற்றும் ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போன்கள் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன.
பின்பு 2448 × 1080 பிக்சல்ஸ், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட சிறந்த டிஸ்பிளே அம்சங்களுடன் வெளிவந்துள்ளன இந்த ஸ்மார்ட்போன்கள்.

தரமான சிப்செட் வசதி
மீடியாடெக் Dimensity 9000+ சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளன புதிய ஆசஸ் போன்கள். எனவே கேமிங் பயனர்கள் இந்த போன்களை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்டோரேஜ் வசதி
ஆசஸ் ROG Phone 6D ஸ்மார்ட்போன் ஆனது 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸடோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பரான கேமரா
ஆசஸ் ROG Phone 6D மற்றும் ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போன்கள் 50எம்பி Sony IMX766 மெயின் சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளன.
மேலும் செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளன இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.

சிறந்த பாதுகாப்பு வசதி
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் cooling system ஆதரவுடன் வெளிவந்துள்ளன. குறிப்பாக இது இது 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையைக் குறைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த இரண்டு போன்களும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான பேட்டரி
ஆசஸ் ROG Phone 6D மற்றும் ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போன்கள் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகின்றன. மேலும் இந்த போன்கள் கிரே நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், AirTrigger 6, 5ஜி, 4ஜி வோல்ட்இ,வைஃபை 6இ, ஜிபிஎஸ். ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன இந்த இரண்டு ஆசஸ் போன்கள்.

தலைசுற்ற வைக்கும் விலை
ஆசஸ் ROG Phone 6D போனின் விலை £799 (இந்திய மதிப்பில் ரூ.72,490) ஆக உள்ளது.
ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போனின் விலை £1,199 (இந்திய மதிப்பில் ரூ. 1.08 லட்சம்) ஆக உள்ளது.
விரைவில் இந்த இரண்டு போன்களும் அனைத்து நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470