விரைவில் 108MP கேமராவுடன் அறிமுகமாகும் Xiaomi 12T ஸ்மார்ட்போன்: சூப்பரான அம்சங்கள்.!
சியோமி நிறுவனம் விரைவில் சர்வதேசச் சந்தையில் புதிய சியோமி 12டி எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சியோமி 12டி
அதேபோல் சியோமி 12டி ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட்போன். இப்போது இணையத்தில் கசிந்த சியோமி 12டி
ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அருமையான சிப்செட் வசதி
சியோமி 12டி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 8100 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கேமிங் வசதிக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும்.
குறிப்பாக இந்த போனில் மீடியாடெக் சிப்செட் உடன் Mali G610 GPU ஆதரவும் உள்ளது.குறிப்பாக சியோமி 12டி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான கேமரா வசதி
சியோமி 12டி ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுளளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் மிக அருமையான புகைப்படங்களை எடுக்கவும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி 12டி ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அட்டகாசமான டிஸ்பிளே
புதிய சியோமி 12டி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 2712 x 1220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்
என்பது குறிப்பிடத்தக்கது.

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 12டி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
ஆதரவு உள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
சியோமி 12டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

கனெக்டிவிட்டி
5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சியோமி 12டி ஸ்மார்ட்போன் மாடல்.மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சியோமி 12டி ஸ்மார்ட்போன் மாடல்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications