Home
Mobile

50MP செல்பி கேமராவுடன் Vivo வி25 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம்.! என்ன விலை?

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வி25 5ஜி (Vivo V25 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

 விவோ வி25 5ஜி

விவோ வி25 5ஜி

ஆனால் அதிக விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த விவோ போனில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்த Vivo V25 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 டிஸ்பிளே அம்சங்கள்

டிஸ்பிளே அம்சங்கள்

விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் இந்த போன் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.

மேலும் 1,080x2,404 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 சூப்பரான சிப்செட்

சூப்பரான சிப்செட்

விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.

அதாவது இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த விவோ போன்.

50எம்பி கேமரா

50எம்பி கேமரா

விவோ வி25 5ஜி போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த போனில் வீடியோ டெம்ப்ளேட்களுடன் வரும் Vlog மோட் வசதியையும் பெறமுடியும். அதேபோல் Elegant பிளாக் மற்றும் சர்ஃபிங் ப்ளூ நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 கேம் பூஸ்ட் மோட்

கேம் பூஸ்ட் மோட்

கேம் பூஸ்ட் மோட், லிக்விட் கூலிங் சிஸ்டம் மற்றும் 4டி கேம் வைப்ரேஷனுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதேபோல் 8ஜிபி/12ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது அசத்தலான விவோ வி25 5ஜி போன்.

 அட்டகாசமான பேட்டரி

அட்டகாசமான பேட்டரி

புதிய விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

பின்பு 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளதுஇந்த விவோ போன்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

 என்ன விலை?

என்ன விலை?

  • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.
  • 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.31,999-ஆக உள்ளது.
  • விவோ இ-ஸ்டோர், பிளிப்கார்ட் தளத்தில் இந்த விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2500 வரை கேஷ்பேக் கிடைக்கும்.

    மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New flagship Phone Vivo V25 5G With 50-Megapixel Selfie Camera in India Launched: Specs, Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X