செம ஸ்டைலான Redmi கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

|

ரெட்மி நிறுவனம் செம ஸ்டைலான ரெட்மி கே50 அல்ட்ரா (Redmi K50 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாம் எதிர்பார்த்த அனைத்து சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ரெட்மி கே50 அல்ட்ரா

ரெட்மி கே50 அல்ட்ரா

ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம் மற்றும் சில்வர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சத்தமில்லாமல் வேலையை காட்டிய ஜியோ: இரண்டு அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு- 28 நாட்கள் பிளான்!சத்தமில்லாமல் வேலையை காட்டிய ஜியோ: இரண்டு அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு- 28 நாட்கள் பிளான்!

OLED டிஸ்பிளே

OLED டிஸ்பிளே

ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் 12-bit OLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும்.

மேலும் 2,712 x 1,220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு வீட்டையே வாங்கிருவோமே- இந்தியாவில் ரூ.75,00,000 மதிப்புள்ள எல்ஜி ரோலபிள் டிவி: அப்படி என்ன ஸ்பெஷல்?ஒரு வீட்டையே வாங்கிருவோமே- இந்தியாவில் ரூ.75,00,000 மதிப்புள்ள எல்ஜி ரோலபிள் டிவி: அப்படி என்ன ஸ்பெஷல்?

அடேங்கப்பா என சொல்ல வைக்கும் சிப்செட்

அடேங்கப்பா என சொல்ல வைக்கும் சிப்செட்

புதிய ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதிக்கு தனி கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம். அதாவது இந்த போன் குவால்காம்ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன். மேலும்
VC liquid கூலிங் சிஸ்டம் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். எனவே இந்த போனை எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும்சூடாகாது.

உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..

நாம் எதிர்பார்த்த கேமரா வசதி

நாம் எதிர்பார்த்த கேமரா வசதி

ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.

எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் கூட அருமையான படங்களை எடுக்க முடியும்.

Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..

512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

வியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமாவியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமா

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே
இந்த போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். பின்புரெட்மி கே50 அல்ட்ரா போனில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சூப்பர் கனெக்டிவிட்டி

சூப்பர் கனெக்டிவிட்டி

அதேபோல் டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, டூயல்-பேண்ட் ஜிஎன்எஸ்எஸ், என்எப்சி, ஐபி53 மதிப்பீடு, டால்பி அட்மாஸ்-ஆதரவு டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் வைப்ரேஷன் மோட்டார் மற்றும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் உட்பட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி கே50 அல்ட்ரா
போன்.

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.! தெரியாமல் கூட 'இதை' மட்டும் கிளிக் செய்யாதீர்கள்? ஏன் தெரியுமா?வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.! தெரியாமல் கூட 'இதை' மட்டும் கிளிக் செய்யாதீர்கள்? ஏன் தெரியுமா?

 என்ன விலை?

என்ன விலை?

தற்போது ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி கே50 அல்ட்ரா போனின் ஆரம்ப விலை CNY 2,999 (ரூ.35,400) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
New Flagship Redmi K50 Ultra launched:Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X