மிகவும் ஸ்லிம்மான 5G போன் அறிமுகம் செய்த Motorola: விலை எவ்வளவு தெரியுமா?

|

மோட்டோரோலா நிறுவனம் மிகவும் ஸ்லிம்மான மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன்
தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 2022

மோட்டோரோலா எட்ஜ் 2022

அதேபோல் இந்த மோட்டோரோலா எட்ஜ் 2022 போன் தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும்
அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Oneplus, Vivo, Nothingக்கு போட்டியாக களமிறங்கும் Realme- ஸ்மார்ட்போன்னா இப்படி இருக்கனும்!Oneplus, Vivo, Nothingக்கு போட்டியாக களமிறங்கும் Realme- ஸ்மார்ட்போன்னா இப்படி இருக்கனும்!

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

பின்பு 1,080×2,400 பிக்சல்ஸ்,144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

காத்திருந்தது போதும், பணத்தை ரெடி பண்ணுங்க- Apple iPhone 14 அறிமுக தேதி இதுதானா?காத்திருந்தது போதும், பணத்தை ரெடி பண்ணுங்க- Apple iPhone 14 அறிமுக தேதி இதுதானா?

 தரமான பிராசஸர்

தரமான பிராசஸர்

மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 1050 பிராசஸர் உடன் 6என்எம் சிப் வசதி உள்ளது. எனவே இந்தஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Phone (1) விலையை உயர்த்திய Nothing: நேரம் பார்த்து செஞ்சுட்டாங்க, எவ்வளவு அதிகம் தெரியுமா?Phone (1) விலையை உயர்த்திய Nothing: நேரம் பார்த்து செஞ்சுட்டாங்க, எவ்வளவு அதிகம் தெரியுமா?

50எம்பி பிரைமரி சென்சார்

50எம்பி பிரைமரி சென்சார்

புதிய மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு அங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

வேலை வாய்ப்புகள்: அடிமடியில் கை வைக்கும் மோசடி கும்பல்., WhatsApp இல் இதை தொட்டால் கெட்டோம்!வேலை வாய்ப்புகள்: அடிமடியில் கை வைக்கும் மோசடி கும்பல்., WhatsApp இல் இதை தொட்டால் கெட்டோம்!

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 2022 போன். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.

ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை
இருக்காது. பின்பு 30W டர்போபவர் வயர்டுசார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுஇந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.

மிட்-ரேன்ஜ் விலையில் அறிமுகமான Oppo Reno 8: அம்சங்களை அள்ளிக் கொடுத்து வாயடைத்த Oppo!மிட்-ரேன்ஜ் விலையில் அறிமுகமான Oppo Reno 8: அம்சங்களை அள்ளிக் கொடுத்து வாயடைத்த Oppo!

சூப்பர் கனெக்டிவிட்டி

சூப்பர் கனெக்டிவிட்டி

சிங்கிள் சிம் 5ஜி, புளூடூத் 5.2, என்எப்சி, வைஃபை 6 மற்றும் யூஎஸ்பி-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Jio Phone 5G இம்மாத இறுதியில் அறிமுகமா?., விலை இதுவா இருந்தா, முதல் இந்திய பிராண்ட் இதுதான்!Jio Phone 5G இம்மாத இறுதியில் அறிமுகமா?., விலை இதுவா இருந்தா, முதல் இந்திய பிராண்ட் இதுதான்!

என்ன விலை?

என்ன விலை?

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போனின் விலை $499.99 (இந்திய மதிப்பில் ரூ.40,000) ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Flagship 5G Phone Motorola Edge 2022 Launched : Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X