Home
Mobile

அட்றா சக்கை.. தீபாவளி ஆபர்னா இப்படி இருக்கணும்.. 2 Samsung போன் மீது ரூ.12,500 டிஸ்கவுண்ட்.. என்ன மாடல்கள்?

சாம்சங் (Samsung) நிறுவனமானது தனது 2 ஸ்மார்ட்போன்கள் மீது வரையறுக்கப்பட்ட பண்டிகை கால சலுகையை (Limited period festive offer) அறிவித்துள்ளது. அவைகள் - சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 (Galaxy Z Fold 6) மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 (Galaxy Z Flip 6) மாடல்கள் ஆகும். தற்போது இவ்விரு ஸ்மார்ட்போன்கள் மீதுமே சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அணுக கிடைக்கிறது. என்னென்ன மாடல்கள் மீது என்னென்ன ஆபர், டிஸ்கவுண்ட் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 மீதான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்: சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6-ஐ வாங்கும் வாடிக்கையாளர்கள் அப்கிரேடட் போனஸ் அல்லது ரூ.12,500 மதிப்புள்ள பேங்க் கேஷ்பேக்கை பெறலாம். கூடுதலாக 24 மாத காலத்திற்கான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,64,999 ஆகும் மற்றும் இஎம்ஐ திட்டங்கள் மாதத்திற்கு ரூ.4,584 முதல் தொடங்குகின்றன.

2 Samsung போன் மீது ரூ.12,500 டிஸ்கவுண்ட்.. என்ன மாடல்கள்?

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 மீதான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்: சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6-ஐ வாங்கும் வாடிக்கையாளர்கள் அப்கிரேடட் போனஸ் அல்லது ரூ.11,000 மதிப்புள்ள பேங்க் கேஷ்பேக்கை பெறலாம். ஃபோல்ட் மாடலை போலவே இதுவும் 24 மாத காலத்திற்கான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தின் கீழ் வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,09,999 ஆகும் மற்றும் இஎம்ஐ திட்டங்கள் மாதத்திற்கு ரூ.3,056 முதல் தொடங்குகின்றன.

கூடுதல் நன்மைகள் மற்றும் ப்ரோடெக்ஷன்: இவ்விரு மாடல்களையும் வாங்கும் பயனர்களுக்கு சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் அஷ்யூரன்ஸ் திட்டமானது ரூ.999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். முன்னதாக இந்த விலை ஃபோல்ட் 6 மாடலுக்கு ரூ.14,999 என்றும், ஃபிளிப் 6 மாடலுக்கு ரூ.9,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த திட்டம் - வருடத்திற்கு இரண்டு உரிமைகோரல்களுடன் விரிவான டிவைஸ் ப்ரொடெக்ஷனை வழங்குகிறது. மேலும் 2 டிவைஸ்களிலும் சாம்சங் நாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது, இது பிராண்டின் பாதுகாப்பு தளமாகும், இது பாதிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிரானது; டேட்டா பாதுகாப்பை உறுதி செய்கிறது. கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 ஆகிய இரண்டுமே இந்தியா முழுவதும் உள்ள முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் வாங்க கிடைக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 7.6-இன்ச் அளவிலான QXGA+ டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் அவுட்டர் டிஸ்பிளேவானது 410 பிபிஐ மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவாக உள்ளது.

இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 10எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீக்களுக்கு, கவர் ஸ்கிரீனில் 10எம்பி கேமராவும், இன்னர் டிஸ்பிளேவில் 4எம்பி அண்டர் டிஸ்பிளே கேமராவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது 4400mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதாவது இது 25W வயர்டு, 15W வயர்லெஸ் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும். மேலும் இது கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Festive Offer Samsung Galaxy Z Fold 6 and Galaxy Z Flip 6 get Discount Upto Rs 12500
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X