கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!

|

ஆயிரம் தான் ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் கூட.. ஃப்ளிப் போன்கள் (Flip Phone) என்றாலே ஒரு தனி கெத்து; ஒரு தனி லுக் தான்! இல்லையா?

இன்னமும் கூட ஒரு ஃப்ளிப் போனை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது தான்.. அதற்காக கிட்டத்தட்ட லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் Samsung நிறுவனத்தின் Flip Phone-களையா வாங்க முடியும்?

ஆனால்.. NOKIA -வின் இந்த லேட்டஸ்ட் Flip Phone-ஐ வாங்கலாமே!

ஆனால்.. NOKIA -வின் இந்த லேட்டஸ்ட் Flip Phone-ஐ வாங்கலாமே!

அட ஆமாங்க! தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் கூட இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சோபிக்க முடியாது என்பதை நன்றாக புரிந்துகொண்ட நோக்கியா நிறுவனம், இந்தியாவில் தனது லேட்டஸ்ட் ஃபீச்சர் போன் (Feature Phone) ஒன்றை, நம்ப முடியாத டிசைன் மற்றும் விலையின் கீழ் அறிமுகம் செய்து உள்ளது.

அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எதன் வழியாக வாங்க கிடைக்கிறது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்!

மொத்தம் 8 போன்கள்! இதுக்கு மேல விலை குறையாது; சரியான வாய்ப்பு!மொத்தம் 8 போன்கள்! இதுக்கு மேல விலை குறையாது; சரியான வாய்ப்பு!

அது Nokia 2260 Flip Phone ஆகும்!

அது Nokia 2260 Flip Phone ஆகும்!

நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிப்பதற்கான உரிமத்தை பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது, இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் 4ஜி VoLTE ஃபீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது.

அது நோக்கியா 2660 4ஜி ஃபிளிப் போன் (Nokia 2660 4G Flip Phone) ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே இந்த ஃபீச்சர் ஃபோன் ஆனது ஃபிளிப் டிசைனுடன் வருகிறது.

இந்த டிசைன் வெறும் ஸ்டைலுக்காக மட்டும் இல்ல..!

இந்த டிசைன் வெறும் ஸ்டைலுக்காக மட்டும் இல்ல..!

போன் கால்களை எடுப்பதை எளிதாக்கும் வண்ணம், மைக்ரோஃபோன் மற்றும் இயர்பீஸை நெருக்கமாக கொண்டு வரும் வடிவமைப்பை பெற்றுள்ள நோக்கியா 2260 மாடல் ஆனது HAC (Hearing Aid Compatibility) மற்றும் ஆப்ஷனல் Nokia Charging Cradle உடனும் வருகிறது.

2 நாள் பேட்டரி லைஃப் வேணும்னா.. இந்த 10 Samsung போன்களும் தான் லாயக்கி!2 நாள் பேட்டரி லைஃப் வேணும்னா.. இந்த 10 Samsung போன்களும் தான் லாயக்கி!

Nokia 2260-வின் 3 முக்கிய அம்சங்கள்!

Nokia 2260-வின் 3 முக்கிய அம்சங்கள்!

நோக்கியாவின் இந்த புதிய ஃபீச்சர் ஃபோன் ஆனது பெரிய டிஸ்ப்ளே, Hearing aid compatibility (சுருக்கமாக கூடுதல் ஆடியோ சிக்னலை வழங்கும் டிசைன்) மற்றும் நீண்ட பேட்டரி லைஃப் போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.

ஒரு எமர்ஜென்சி பட்டனும் உள்ளது!

ஒரு எமர்ஜென்சி பட்டனும் உள்ளது!

மேலும் இந்த போனில் எமர்ஜென்சி பட்டனும் (emergency button) உள்ளது, இதை கொண்டு நீங்கள் உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விரைவாக தொடர்பு கொள்ளமுடியும்; மேலும் அவசரகாலத்தில் தொடர்பு கொள்வதற்காக 5 போன் எண்களை கூட சேமிக்கலாம்.

இந்த 8 போன்களை பற்றி விளம்பரம் வராது; ஆனாலும் மார்க்கெட்ல பெஸ்ட்டு!இந்த 8 போன்களை பற்றி விளம்பரம் வராது; ஆனாலும் மார்க்கெட்ல பெஸ்ட்டு!

வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

Nokia 2660 Flip Phone ஃபோன் 2.8-இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது VoLTE ஆதரவுடன் டூயல் 4G கனெக்ஷனை வழங்கும்.

1450mAh "நீக்கக்கூடிய" பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஃபிளிப் போன் ஆனது மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவுடன் வருகிறது மற்றும் சீரிஸ் 30+ ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. சுவாரசியமாக இந்த போனில் VGA கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. கடைசியாக இது FM ரேடியோவையும் ஆதரிக்கிறது!

என்ன விலை?

என்ன விலை?

இந்தியாவில் Nokia 2660 Flip Phone ஆனது ரூ.4,699 என்கிற விலையின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

விற்பனை விவரங்கள்:

விற்பனை விவரங்கள்:

விற்பனையை பொறுத்தவரை, நோக்கியா 2260 ஃப்ளிப் போன் ஆனது நோக்கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கிறது. இதை ஆஃப்லைன் வழியாக வாங்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களை அணுகலாம்!

Best Mobiles in India

English summary
New Feature Mobile 2022 Nokia 2660 Flip Phone with 4G VoLTE Launched in India Check Price Specifications Sale Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X