சூப்பர்-பட்ஜெட் விலையில் அறிமுகமான Redmi A1.. செப்.9 முதல் விற்பனை!

|

இந்தியாவில் ரெட்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக Redmi A1 இன்று (அதாவது செப்டம்பர் 6) அறிமுகப்படுத்தப்பட்டது.

ரெட்மி ஏ1 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனை? எதன் வழியாக வாங்க கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இந்த விலையில் இப்படிப்பட்ட அம்சங்களா?

இந்த விலையில் இப்படிப்பட்ட அம்சங்களா?

ரெட்மி A1 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பற்றி பார்க்கும் போது, "இந்த விலையில் இப்படிப்பட்ட அம்சங்களா?" என்றே கேட்க தோன்றும்.

ஏனெனில் இது வாட்டர்-டிராப் ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 SoC மூலம் இயக்கப்படுகிறது.

ரூ.8,999-க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்!ரூ.8,999-க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்!

போதாக்குறைக்கு..!

போதாக்குறைக்கு..!

நல்ல டிசைன், நல்ல சிப்செட் உட்பட Redmi A1 ஆனது 8 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பையும் கொண்டுள்ளது.

எல்லாவற்றை விடவும் மேலாக இது 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது மற்றும் 20 க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளை ஆதரிக்கிறது. கடைசியாக க்ளீன் ஆன Android எக்ஸ்பீரியன்ஸையும் வழங்குகிறது.

Redmi A1 விலை மற்றும் விற்பனை!

Redmi A1 விலை மற்றும் விற்பனை!

இந்தியாவில் ரெட்மி A1 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 2ஜிபி ரேம் + 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அதன் விலை ரூ.6,499 ஆகும். இது கிளாசிக் பிளாக், லைட் க்ரீன் மற்றும் லைட் ப்ளூ என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

மொத்தம் 6 Vivo போன்கள்; எல்லாவற்றின் மீதும் ரூ.4,000 ஆபர்; இதோ லிஸ்ட்!மொத்தம் 6 Vivo போன்கள்; எல்லாவற்றின் மீதும் ரூ.4,000 ஆபர்; இதோ லிஸ்ட்!

எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக விற்கப்படும்?

எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக விற்கப்படும்?

ரெட்மியின் இந்த லேட்டஸ்ட் சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது, பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் வழியாகவும் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Mi.com வழியாகவும் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்கள் மற்றும் சியோமியின் ரீடெய்ல் பார்ட்னர்கள் வழியாகவும் வாங்க கிடைக்கும்.

இது வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 4 மணி முதல் விற்பனைக்கு வரும்!

ரூ.6,499 க்கு ரெட்மி ஏ1 வொர்த் ஆன ஸ்மார்ட்போனா?

ரூ.6,499 க்கு ரெட்மி ஏ1 வொர்த் ஆன ஸ்மார்ட்போனா?

கண்டிப்பாக! ஏனெனில் இது டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வருகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-இன் கீழ் இயங்குகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் உடன் 6.52-இன்ச் அளவிலான HD+ டிஸ்ப்ளேவை பேக் செய்கிறது. மேலும் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ A22 SoC உடனாக 2GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

போட்டோ மற்றும் வீடியோ பதிவிற்கு வரும்போது, Redmi A1 ஆனது AI-ஆதரவு கொண்ட 8 மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை வழங்குகிறது.

செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு வரும் போது, இது 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

Samsung ஷாக் ஆகும் அளவிற்கு.. Amazon அறிவித்துள்ள ரூ.40,049 ஆபர்!Samsung ஷாக் ஆகும் அளவிற்கு.. Amazon அறிவித்துள்ள ரூ.40,049 ஆபர்!

என்ன பேட்டரி?

என்ன பேட்டரி?

இது 10W மைக்ரோ-யூஎஸ்பி சார்ஜிங் ஆதரவுடன் 5,000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது, இது 32GB அளவிலான ஸ்டோரேஜை மட்டுமே கொண்டிருந்தாலும் கூட, மைக்ரோ SD கார்டு வழியாக அதை 512GB வரை விரிவாக்க முடியும்.

குறிப்பிடத்தக்க வண்ணம், ரெட்மி நிறுவனத்தின் இந்த என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஆனது Redmi 11 Prime 5G மற்றும் Redmi 11 Prime 4G ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து அறிமுகமாகி உள்ளது.

Redmi 11 Prime 5G மற்றும் Redmi 11 Prime 4G-யின் விலை விவரங்கள்:

Redmi 11 Prime 5G மற்றும் Redmi 11 Prime 4G-யின் விலை விவரங்கள்:

இந்தியாவில் ரெட்மி 11 ப்ரைம் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.13,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.15,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள ரெட்மி 11 ப்ரைம் 4ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.12,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.14,999 க்கும் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
New Entry Level Budget Smartphone 2022 Redmi A1 Launched India Sale Starts From September 9

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X