NOKIA-வின் புது மினி போன்.. சிம்பிள் ஆன டிசைனில் 4ஜி நெட்வொர்க் ஆதரவு.. எந்த HMD மாடல்?
1008 ஆப்கள், நொடிக்கு நொடி நோட்டிபிக்கேஷன்கள், மல்டி-டாஸ்கிங் செய்ய உதவும் சிப்செட் மற்றும் ரேம் + ஸ்டோரேஜ் காம்பினேஷன் என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் கொண்டுள்ள ஒரு நவீன கால ஸ்மார்ட்போனை விட, மிகவும் எளிமையான ஒன்றை விரும்பும் பயனர்களை இலக்காக கொண்டு - ஒரு புதிய நோக்கியா மினி போன் (NOKIA Mini Phone) ரெடியாவது போல் தெரிகிறது.
அது எச்எம்டி ஃபேம் (HMD Fame) என்று அழைக்கப்படலாம். நோக்கியா பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, மற்றொரு காம்பாக்ட் போனை தயாரித்து வருவதாக தெரிகிறது. டிப்ஸ்டர் smashx_60 வழியாக ஆன்லைனில் லீக் ஆகியுள்ள புகைப்பங்கள், எச்எம்டி ஃபேம் என்கிற பெயரில், இன்னும் அறிவிக்கப்படாத ஒரு ஸ்மார்ட்போனை காட்டுகின்றன.

இது தற்போது சந்தையில் உள்ள பெரும்பாலான போன்களை விடக் குறிப்பிடத்தக்க அளவில் சிறியதாகவும், பிளேஃபுல் ஆகவும் தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரைட் ஆன ப்ளூ கலரில் உள்ளது. டிசைனை பொறுத்தவரை ரவுண்டட் கார்னர்களையும், சாஃப்ட் ஆன ஓவர்-ஆல் ஷேப் உடனும் காணப்படுகிறது.
இது கடந்த ஆண்டு வெளியான எச்எம்டி எக்ஸ்ப்ளோராஒன் (HMD XploraOne) போனிற்கு மிகவும் நெருக்கமான டிசைனாக தெரிகிறது, இது எச்எம்டி ஃபேம் போனின் அளவை பற்றிய ஒரு தோராயமான எண்ணத்தை நமக்கு அளிக்கிறது. இதன் மூலம், ஃபேம் என்பது சற்றே சிறிய ஸ்மார்ட்போனாக இல்லாமல், உண்மையாகவே ஒரு காம்பாக்ட் (மினி) போனாக இருக்க போகிறது என்பது தெளிவாகிறது.
ஆனால் இதன் அம்சங்கள் பற்றி இன்னுமும் எந்த விவரங்களும் இல்லை. இருப்பினும் இது எச்எம்டி-யின் சில லேட்டஸ்ட் ஹைப்ரிட் ஃபீச்சர் போன்களை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது எச்எம்டி டச் 4ஜி (HMD Touch 4G) போன்ற போன்களை போல 4ஜி நெட்வொர்க் கனெக்டிவிட்டி ஆதரவு மற்றும் கிளவுட் அடிப்படையிலான சேவைகள் போன்ற நவீன அடிப்படைகளை வழங்கும் அதே வேளையில், விஷயங்களை எளிமையாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தலாம்
எக்ஸ்ப்ளோராஒன் போன் கூட - ஒரு சிறிய க்யூவிஜிஏ டிஸ்ப்ளே, யூனிசாக் டி127 சிப்செட், பேஸிக் கேமரா மற்றும் பேட்டரி லைஃப்பில் அதிக கவனம் செலுத்துதல் உள்ளிட்ட மிகவும் மிதமான வன்பொருளையே பயன்படுத்துகிறது. ஆக எச்எம்டி பேம் மாடல் ஆனது, வெறும் செயல்திறனை விட நடைமுறை பயன்பாடு மற்றும் நீண்ட நேர பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, அதே வகையான பயனர்களை இலக்காக கொள்ளக்கூடும்.
சமீபகாலமாகவே எச்எம்டி நிறுவனம் இந்த வகையின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது, குறிப்பாக டிஜிட்டல் மினிமலிசம், குழந்தைகள் அல்லது முழுமையான ஸ்மார்ட்போன் அனுபவத்தை விரும்பாத பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தி வருகிறது. ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப்களுடன் நேரடியாக போட்டியிடுவதற்குப் பதிலாக, போதுமான ஸ்மார்ட் செயல்பாடுகளுடன் கூடிய சிறிய, பயன்படுத்த எளிதான டிவைஸ்களை உருவாக்குவதில் இந்நிறுவனம் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
மெசேஜிங் அல்லது இண்டர்நெட் அக்சஸை முழுமையாக விட்டுக்கொடுக்காமல், ஸ்க்ரீனில் செலவிடும் நேரத்தை குறைப்பதற்கான வழிகளை சில பயனர்கள் தீவிரமாக தேடுவதால், இந்த அணுகுமுறை சமீபகாலமாக மிகவும் பொருத்தமானதாக மாறியுள்ளது. எச்எம்டி ஃபேமின் வட்டமான வடிவமைப்பும் சற்று தனித்து நிற்கிறது. இது எளிய பிடிமானத்தையும், கிட்டத்தட்ட ஒரு பொம்மையை போலவும் உள்ளது. இருப்பினும் இந்த டிசைனே அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூட மாறலாம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, எச்எம்டி ஃபேம் போனின் அம்சங்கள், விலை அல்லது லான்ச் டைம்லைன் குறித்து எச்எம்டி நிறுவனத்திடம் இருந்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால், லீக் ஆன தகவல் உண்மையாக இருந்தால், எச்எம்டி-யின் வளர்ந்து வரும் மினிமலிஸ்ட் மற்றும் ஹைப்ரிட் போன்களின் வரிசையில் எச்எம்டி ஃபேம் மற்றொரு சுவாரஸ்யமான மாடலாக இருக்கும் என்பதில் மட்டும் சந்தேகமே வேண்டாம். Photo Courtesy: GizmoChina / Tipster smashx_60


Click it and Unblock the Notifications