சும்மாவே செமயா இருக்கும்- ரெட்மி நோட் 10 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் புது வண்ண மாறுபாடு வெளியீடு!
சியோமி தனது ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் டார்க் நெபுலா வண்ண மாறுபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான அதே சிறப்பம்சங்களோடு இந்த மாறுபாடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ப்ரான்ஸ், க்ளாசியல் ப்ளூ மற்றும் டார்க் நைட் என்ற வண்ண விருப்பத்தில் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ்
ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு பதிப்பின் விலை ஆனது ரூ.17,999 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.18,999 ஆகவும் இருக்கிறது. அதேபோல் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனத்தின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.19,999 ஆக இருக்கிறது. அதேபோல் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.21,999 ஆகவும் இருக்கிறது.

புதிய டார்க் நெபுலா வண்ண மாறுபாடு
ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனத்தின் புதிய டார்க் நெபுலா வண்ண மாறுபாடு வகைகள் தற்போது எம்ஐ.காம்-ல் காணப்படுகின்றன. ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக வெளியான பிற வண்ண மாறுபாடுகளில் இருக்கும் அதே அம்சங்கள் இந்த சாதனத்திலும் இருக்கிறது.

சிறந்த அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்
ரெட்மி நோட் 10 தொடர் ஸ்மார்ட்போனானது மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனாகும். ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டன. 8ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் வருகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸப்ளே எச்டிஆர் 10 ஆதரவை கொண்டிருக்கிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. குவாட் கேமரா அமைப்போடு இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 எம்பி சூப்பர் மேக்ரோ ஷூட்டர் கேமரா மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் உடன் வருகிறது.

16 எம்பி செல்பி கேமரா
ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது.

108 எம்பி முதன்மை கேமரா
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 108 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி நான்காம் நிலை கேமராக்கள் ஆகியவை உள்ளது. அதேபோல் 16 எம்பி செல்பி கேமரா வசதி இதில் இருக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவை உள்ளது.


Click it and Unblock the Notifications