பொளந்து கட்டிய POCO! வெறும் ரூ.8,799-க்கு 5G, 8GB ரேம், 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. மார்ச் 10 முதல் விற்பனை!
மலிவான விலைக்கு ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போன் வராதா என்று காத்துக்கொண்டிருந்த ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு குட் நியூஸ். போக்கோ (POCO) நிறுவனமானது ஏர்டெல் (Airtel) உடன் கூட்டு சேர்ந்து ரூ.8799 க்கு ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
போக்கோ நிறுவனமானது போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G) ஸ்மார்ட்போனின் பிரத்யேக ஏர்டெல் வெர்ஷனை (Airtel Exclusive version) அறிமுகம் செய்துள்ளது. இது வருகிற மார்ச் 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும், இது ரூ.8,799 க்கு வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் மீது ஏர்டெல் வழங்கும் சிறப்பு சலுகைகளை (Airtel Special Offers) பொறுத்தவரை, இந்த மாடலை வாங்கும் ஏர்டெல் ப்ரீபெய்டு (Airtel Prepaid) வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி ஒன்-டைம் மொபைல் டேட்டா (50GB of one-time mobile data) கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ஒரு ஏர்டெல் பயனர் அல்ல என்றால்.. கவலை வேண்டாம்!
உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து சிம் கார்ட்டை டெலிவரி (Doorstep SIM delivery) செய்யும் விருப்பத்தை தேர்வுசெய்யலாம். இதன்கீழ் நீங்கள் "வேகமான செயல்முறையின் கீழ்" ஏர்டெல் கஸ்டமராக மாற்றலாம். இந்த விருப்பத்தை தேர்வு செய்பவர்களுக்கு உடனடி ஆக்டிவேஷனும் (Instant activation) கிடைக்கும், கூடவே ஏர்டெல் வழங்கும் 50ஜிபி ஒன்-டைம் மொபைல் டேட்டா பலனும் கிடைக்கும்.
நினைவூட்டும் வண்ணம் போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த டிசம்பர் 2023 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ,10,499 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,499 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,499 க்கும் வாங்க கிடைத்தது.
ஸ்டாண்டர்ட் வெர்ஷனை (Stantard Version) போலவே ஏர்டெல் எக்ஸ்க்ளூஸிவ் வெர்ஷனும் கேலக்டிக் பிளாக், ஓரியன் ப்ளூ மற்றும் போலரிஸ் கிரீன் (Galactic Black, Orion Blue, Polaris Green ) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். மேலும் இவ்விரு வெர்ஷன்களின் அம்சங்களிலும் எந்த மாற்றங்களும் இருக்காது.
போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது 1600 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 90Hz refresh rate), 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (600 nits peak brightness), 180ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் (180Hz touch sampling rate) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass 3 protection) உடனான 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 6100+ SoC) கொண்டு இயங்குகிறது. இது 8ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) அடிப்படையிலான எம்ஐயுஐ 14 (MIUI 14) உடன் அனுப்பப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எல்இடி ஃபிளாஷ் யூனிட் (LED Flash unit) உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டுள்ளது. அதில் 50-மெகாபிக்சல் ஏஐ மெயின் கேமரா மற்றும் குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை சென்சார் உள்ளன. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 18W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








