Home
Mobile

குறைக்கப்பட்ட விலையில்.. புதிய Gold கலரில்.. 2 தரமான Redmi 5G போன்கள் மீண்டும் அறிமுகம்!

வழக்கமாக.. ஏற்கனவே அறிமுகமான ஒரு ஸ்மார்ட்போனின் புதிய கலர் ஆப்ஷன் (New Colour Option) அறிமுகம் செய்யப்படும் போது, அந்த ஸ்மார்ட்போனின் அவுட்லுக்கில் மட்டுமே மாற்றங்கள் இருக்கும்; அதாவது முந்தைய கலர் ஆப்ஷனிற்கும் புதிய கலர் ஆப்ஷனிற்கும் - அம்சங்கள் மற்றும் விலை அடிப்படையில் எந்த மாற்றங்களும் இருக்காது.

ஆனால் சீன நிறுவனமான ரெட்மி "இந்த விஷயத்தில்" சற்றே சுவாரசியத்தை கூட்டும் வண்ணம், கடந்த 2024 டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 2 ரெட்மி ஸ்மார்ட்போன்களின் புதிய கலர் ஆப்ஷனை அவைகளின் "அசல் அறிமுக விலையை விட" குறைவான விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய Gold கலரில்.. 2 தரமான Redmi 5G போன்கள் மீண்டும் அறிமுகம்!

என்ன மாடல்கள்? ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 14 Pro Plus 5G) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G) ஆகிய 2 மாடல்களும் புதிய ஷாம்பெயின் கோல்ட் கலர் (Champagne Gold Colour) ஆப்ஷனை பெற்றுள்ளன.

எப்போது விற்பனை? என்ன விலை? ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி மாடல்களின் புதிய ஷாம்பெயின் கோல்ட் கலர் ஆப்ஷன் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டன. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), எம்ஐ.காம் (Mi.com) வலைத்தளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஷாவ்மீ ரீடெயில் கடைகள் மூலம் வாங்க கிடைக்கிறது

ஷாம்பெயின் கோல்ட் கலரில் வரும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும், 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் மற்றும் 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் முறையே ரூ.29,999 மற்றும் ரூ. 32,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல ஷாம்பெயின் கோல்ட் கலரில் வரும் ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும், 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1,000 உடனடி வங்கி தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய Gold கலரில்.. 2 தரமான Redmi 5G போன்கள் மீண்டும் அறிமுகம்!

ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2, டியுவி ரெயிண்லேண்ட் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 70300 அல்ட்ரா சிப்செட் (Mediatek Dimensity 7300 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மூன்றாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. வேகன் லெதர் பினிஷ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஐபி66, ஐபி67, ஐபி69 ரேட்டிங்களுக்கானஆதரவும் உள்ளது.கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 Chipset) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ஷாவ்மீ கஸ்டம் சூப்பர் சென்சார் பிளாக்ஷிப் லைட் ஹண்டர் 800 (Xiaomi Custom Super Sensor Flagship Light Hunter 800) கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 50எம்பி போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி66, ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங்கை கொண்டுள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6200mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Champagne Gold Colour of Redmi Note 14 Pro Plus 5G Note 14 Pro 5G Launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X